Author Topic: மைதா இடியாப்பம்  (Read 746 times)

Offline kanmani

மைதா இடியாப்பம்
« on: January 23, 2013, 10:04:59 AM »

    மைதாமாவு- 1கப்
    தேங்காய் துருவல்-1கப்
    வெல்லம்-1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 2டீஸ்பூன்
    உப்பு தேவைக்கு

     முதலில் மைதமாவை ஒரு துணியில் கட்டி ஆவியில் வேகவைக்கவும்.
    வேகவைத்து ஆறியதும் சலிக்கவும்
    தேங்காய் திருகி முதல் ,இரண்டாம் தேங்காய்ப்பால் எடுக்கவும்.
    இரண்டாம் பாலை உப்பு சேர்த்து மாவில் ஊற்றி பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
    வெல்லத்தை காய்ச்சி வடிகட்டவும்.
    இட்லி தட்டில் மாவை இடியாப்பகுழல் கொண்டு பிழிந்து ஆவியில் வேகவைக்கவும்.
    முதல் தேங்காய்ப்பாலோடு வெல்லப்பாகையும் ஏலக்காய்ப்பொடியையும் சேர்த்து கலக்கவும்.
    வெந்த இடியாப்பத்தோடு தேங்காய்ப்பால் கலவையை ஊற்றி சாப்பிடலாம்

Note:

காரமாக விரும்பினால் தேங்காய்ப்பாலிற்கு பதிலாக குருமா,வடைகறி அல்லது அன்னாசி மோர்குழம்பு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்