1.
கழண்டுவிழுந்து கொண்டிருக்கிறது
வக்கிரங்களை வன்மங்களை
வஞ்சகங்களை சூழ்ச்சிகளை
பொய்மைகளை போலிமைகளை
சுய இருட்டுக்களை
கேவலமான அந்தரங்கங்களை மறைத்திருக்கும்
அவளின் சுயநிந்தனைகளின் முகமூடிகள்
துல்லியமாய் தெரிய ஆரம்பித்திருக்கிறது
உடைந்த புண்ணினின்று வழியும்
சீழினும் அருவெறுப்பாய்
ஹீனமான அவளின் முகம்