அன்னைக்கு அடுத்து ஆனந்தம் கொடுத்தவள்
அன்னையின் அன்பை பகிர ஆண்டவனால்
அனுப்பபபட்ட அன்புப் பரிசு இவள்!
கடமைகளை மறந்தேன்
கனவிலேயே கண்விழித்து வாழ்ந்தேன்
கன்னியவள் காதலால்!
உடன்பிறப்புகளை உதாசினப்படுத்தினேன்
உண்மையான அன்பை உத்தரலானேன்
உன்னதமான காதலால்!
நம்பிக்கை தரும் நண்பர்களின்
நட்புவட்டாரத்தை விட்டு விலகலானேன்
நஞ்சாய் என்னுள் கலந்த காதலால்!
முழுமதியான உன் முகம் என்னை
முழுவதும் மறைத்தது, பெண்ணே
மூழ்கிவிட்டேன் உன்னுள்!
காதல் தவத்தைக் கலைத்து
கண்மூடித்தனமாக்கினால்,
காட்டாறாய் மாறிய நான்
கற்களும், முற்களும் நிறைந்த
கரடுமுரடான் தடங்களை
கடக்கலானேன், கால் தடமும்
கரை படிந்த இரத்தமானது, ஆனால்
கனத்த இதயத்தோடு நான் துயில
கல்லறைக்கு வழிகாட்டினால்,
கானல் நீராய் மறைந்தது
காதல், கல்லாக மாறினேன்
கவலையில் உருக்குலைந்தேன்,புரிந்தது
காதல் படகில் பயணிப்பது கவிழ்ப்பதற்கு
கரையேறுவதற்கு அல்ல!!!
(காதலில் கரையேருவதும் கவிழ்வதும் காதலர்களை பொறுத்தே)