Author Topic: உடலில் எண்ணெய் பசை எதுக்கு அதிகமா இருக்குன்னு தெரியுமா?  (Read 459 times)

Offline kanmani

உடலில் எண்ணெய் பசையானது சிலருக்கு அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்த இயற்கை எண்ணெய் உடலில் சுரப்பதால் தான், சருமம் மென்மையாகவும், இளமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் எண்ணெயானது சருமத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் சருமம் பொலிவோடு இருக்கும். இதற்கு என்ன காரணம் என்று பலருக்கு தெரியாது. ஆனால் இதேப் போன்று அளவுக்கு அதிகமாக எண்ணெயானது சருமத்தில் சுரந்தால், அவை சருமத் துளைகளை அடைத்து விடுவதோடு, அழுக்குகள் அந்த சருமத்துளைகளில் தங்கி, முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பிரச்சனை ஏற்படுவதற்கு, அளவுக்கு அதிகமாக எண்ணெயானது சருமத்தில் சுரப்பதே ஆகும். இப்போது எதற்கு அதிகப்படியான எண்ணெயை சுரப்பிகள் சுரக்கின்றன என்று பார்ப்போமா!!!

 உடலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதற்கு காரணங்கள்:

 * இந்த மாதிரி எண்ணெய் அதிகமாக சுரப்பதற்கு ஹார்மோன்களது மாற்றமும் ஒரு காரணம். அதிலும் ஹார்மோன்களின் மாற்றங்கள் பூப்படையும் போது, மாதவிடாயின் போது மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும். அதனால் தான் இளம் பெண்களின் முகங்களில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படுகிறது. ஏனெனில் இவ்வாறு எண்ணெய் அதிகமாக சுரந்தால், அவை சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அதிலும் மாதவிடாயின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகவும், டெஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகவும் சுரப்பதால், அவை எண்ணெய் சுரப்பியில், கெட்டியான எண்ணெயை உருவாக்குகின்றன. எனவே தான் முகம், முதுகு, மார்பகம், தோள்பட்டை போன்றவற்றில் பருக்கள் ஏற்படுகின்றன.

 * மனஅழுத்தமும் ஒரு வகையான காரணம். இவ்வாறு மனமானது அதிக அழுத்தத்திற்கு உட்படும் போது, ஹார்மோன்கள் மோசமான நிலையில் தூண்டப்படுவதால், அவை சருமத்தில் பருக்கள் அல்லது ஒருவித அழற்சி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அதிலும் இந்த அழற்சியானது பொதுவாக மார்பகத்திற்கு மேல், முதுகு, புருவம், மூக்கு, காதுகளுக்கு பின்புறம் போன்ற இடங்களில் ஏற்படும். அதிலும் அழற்சி வரும் இடமானது பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தால் சூழ்ந்திருக்கும். எனவே அதிகமாக டென்சன் அடையாமல் இருந்தால், பருக்கள், அழற்சி போன்றவற்றை தவிர்க்கலாம்.

 * ஒருசில சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தும் அழகுப் பொருட்களான மாய்ச்சுரைசர் க்ரீம் மற்றும் பல பொருட்கள் கூட, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, முகப்பருக்களை ஏற்படுத்தும். அந்த க்ரீம்கள் சருமத்திற்கு பொலிவைத் தரும் தான், ஆனால் அந்த க்ரீமில் உள்ள கெமிக்கலானது, சருமத்துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, அங்கு பாக்டீரியாவை தங்க வைத்துவிடும். பின் என்ன சருமம் தான் அதிகம் பாதிப்படையும். எனவே தான் அதிகம் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்களைப் பயன்படுத்தினால், சிலருக்கு முகத்தில் புள்ளிகளான பருக்கள் ஏற்படுகின்றன. அதற்காக அழகுப் பொருட்களையே பயன்படுத்தக்கூடாது என்பதில்லை, எண்ணெய் அதிகம் இல்லாத அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.