Author Topic: வாஸ்து சாஸ்திரப்படி வீட்டு வாசல்படியின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்?  (Read 1839 times)

Offline Global Angel


வீட்டு வாசல்படியின் எண்ணிக்கை பொதுவாக ஒற்றைப்படையில் இருப்பது நல்லது. மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய வாய் (பேசுதல்) எவ்வளவு சக்தி வந்ததோ அதே அளவுக்கு ஒரு வீட்டின் வாயிலும் சக்தி வாய்ந்தது.

வாயில் உள்ள பற்களுக்கு இணையாக படிக்கட்டுகள் கருதப்படுகின்றன. எனவே, படிக்கட்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் அமைவது நல்லது.

மேலும், வாசலின் குறுக்கே அமர்வது நல்லதல்ல. ஏனென்றால், அறிவியல் ரீதியாக வாசல், ஜன்னல் வழியாகவே காற்று வந்து செல்லும். அதனை மறைப்பது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆன்மிக ரீதியாகப் பார்க்கும் போது வாசலின் வழியாகவே லட்சுமி ஒருவர் வீட்டில் வாசம் செய்ய வருவார் எனக் கருதப்படுகிறது. எனவே வாசலின் குறுக்கே அமர்வது வீட்டிற்கு அரும் லட்சுமியை தடுப்பதற்கு சமம் எனக் கூறினர்.

அதுமட்டுமின்றி வீடு கட்டும் காலத்தில் வாசல்கால் நடும் போது பல்வேறு பூஜைகள் செய்து, நவரத்தினக் கற்கள், பஞ்சலோக பொருட்களை வைத்து அதற்கு தெய்வீகத் தன்மையை ஏற்படுத்துகிறோம். எனவே, அதன் மீது அமரும் போது லட்சுமியை அவமதித்ததாக கருதப்படுகிறது.