Author Topic: ~ பேசும் படம் .! பாரதி என்னுள் வாழ்கிறாய்! ~  (Read 505 times)

Offline MysteRy

பேசும் படம் ..........................!


பாரதி என்னுள் வாழ்கிறாய்!




என்னுள் வேதனை எழுகிறது
கண்கள் மெல்ல பனிக்கிறது..
தவிப்பாய் எனக்கும் இருக்கிறது..
உச்ச கோபம் வருகிறது..

இரண்டும் வண்டி என்றாலும்
பாதை மட்டும் வெவ்வேறா?
ஒன்றின் பருவம் இரண்டிலுமே
ஏக்கம் நிறைந்த பார்வையேன்?


பள்ளி நோக்கி ஒருவண்டி
பணியிடம் நோக்கி மறுவண்டி
மதியே இல்லை என்கிறார்
சதியை விதியே என்கிறார்?


சாலை பாதை ஒன்று எனினும்
பாதை மாறும் நிலை ஏனோ?
நில் கவனி செல் - என்றே
சாலை விதியை சொன்னார்கள்
சமூக விதியும் இதுவென்றே
சொல்ல ஏனோ மறந்தார்கள்?..

”ரொளத்திரம் பழகு என்றாயே
பாரதி என்னுள் வாழ்கிறாய்!