ஒரு நுட்பமான தருணத்தை கொண்ட கரு இந்த கவிதையுடையது, இது போன்ற கவிதைகளை எப்படி துவங்குகிறோம் என்பதில் இருக்கிறது அதன் கனம்
கருவை சொல்லிவிட்டு ரொம்ப ஆவலாய் காத்திருந்தேன், எப்படித்தான் எழுதுறீங்கனு பார்க்க
நீங்க எழுதி முடித்துவிட்டு வாசிக்க சொன்ன போது முதல் பத்திலையே அசந்து போனேன்
//அந்த மாடிக்கு பால்கனிக்கு
அன்றுதான் வந்தாள் ...
இல்லை அதற்க்கு முன்
வந்திருகிறார்கள் ...
இன்றுதான் தனியே ...
//
இது ஒரு இறுக்கமான சூழல், கவிதையை வாசிக்க துவங்கும் போதே ஒரு விடயம் புரிந்துவிடும், ஏதோ ஒரு பிரச்சனை என்று, இன்றுதான் தனியே இதுதான் முதல் பத்தியை அதிகமாய் கனமாக்குகிறது
//கை கோர்த்த நிமிடத்தில் இருந்து
கரைந்து கிறங்கிய மனது
கலங்கி தவிப்பது புரியாத ஜடமாய் என்று ஆனாய் நீ ...?
//
மிக தெளிவாக பதிவு செய்திருக்குறீர்கள் புதுமன/ண தம்பதியர் நடுவில் நடந்த சண்டையென்று
//என்னை புரியாதவனா நீ
என்னுள் வசிகாதவனா நீ
என்னை சுவாசிகதவனா நீ
என்னுள் அடங்காதவனா நீ ..
எல்லாமாய் ஆனவவன் நீ
என்னவனே எங்கு சென்றாய் ..
//
மிக கனமான கேள்விகள், என்னும் அடக்காதவனா ? எனும் கேள்வி உரத்து ஒலிக்கிறது
மிக நுட்பமான ஒரு கவிதைக்கு வாழ்த்துக்கள்ங்க
இது போன்ற கவிதைகளை இன்னும் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்