உன் அன்பில் உருவானேன்...
உன் உயிரில் கருவானேன்...
உன் கருவில் குழந்தையானேன்...
உயிருக்கு மேலே என்னை பாதுகாத்தாய்...
பத்தியம் பார்த்து என் உடல் வளர்த்தாய்...
பாசமாய் கொஞ்சி என்னை குதூகளித்தாய் ...
நான் கண்திறந்து பார்த்ததும்
பூரித்து தாய் பால் ஊட்டினாய்
ஏனம்மா கள்ளி பால் ஊட்டவில்லை
அன்றே எனக்கு கள்ளி பால் ஊட்டி இருந்தால்
இந்த பொல்லாத உலகத்தில்
பொல்லாத மனிதர்களிடத்தில்
அக பட்டு சின்னா பின்னம் ஆகாமல்
பிழைத்திறுபேனே
செடியில் மலரும் முன் வாடிய பூவாய்
உதிர நேர்ந்திருகாதே
அன்று சிசு கொலை பவம் என்று விட்டாயோ?
இன்றோ கசக்கி எரிந்து விட்டார்களே
அன்றே உன் கையால் கொலையாகி
இருந்தால் நான் பிறந்த பலனை அடைந்து இருப்பேனே,,,,,,,