Author Topic: ~ பூசணிக்காய் மோர்க்குழம்பு ~  (Read 1001 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227372
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பூசணிக்காய் மோர்க்குழம்பு



என்னென்ன தேவை?
பூசணிக்காய் - அரை கிலோ,
தயிர் - புளிப்பு இல்லாதது 2 கப்,
தேங்காய் துருவியது - அரை மூடி பெரியது,
இஞ்சி - சிறிது, துவரம்பருப்பு, பச்சரிசி,
கடலைப்பருப்பு - தலா கால் கப்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்,
கடுகு, சீரகம், பெருங்காயம்,
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,
உப்பு -  தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி மூன்றையும் அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் இவற்றை தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு, பருப்புகளையும் இத்துடன் விழுதாக அரைக்கவும்.பூசணிக்காயை தோல் சீவி, பெரியத் துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவிடவும்.

இது நன்றாக வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கை விடாமல் கிளறி (கட்டி படாமல்) கொதிக்க விடவும். இறக்கி வைத்து, தயிரை கடைந்து உடனே சேர்த்து பிறகு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும். தேங்காய் எண்ணெய் மணத்துடன் மலையாள மோர்க்குழம்பு தயார். வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் நல்ல காம்பினேஷன்.