Author Topic: முதல் மேடை நிகழ்ச்சியில் அசத்திய இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் மகன்  (Read 1497 times)

Offline kanmani

சென்னையில் 10வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட 169 படங்கள், இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.

இதன் தொடக்க விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பிரபலமான பாடல்களைப் பாடி அசத்தினர்.

இந்த விழாவில், சிறுவர்கள் மூன்று பேர் பியானோ இசைக் கருவியை வாசித்து அனைவரின் கைதட்டல்களையும் பெற்றனர்.

அதில் ஒரு சிறுவன் இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அமீனின் முதல் மேடை நிகழ்ச்சி இது தான். கடந்த ஒரு வருடமாக சட்டர்ஜி மாஸ்டரிடம், பியானோ மற்றும் இசைப் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

தொடக்க நிகழ்ச்சியில், தன் தந்தை முதன்முதலாக இசையமைத்த, ரோஜா படத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை பியானோவில் வாசித்துக் காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
http://www.youtube.com/v/eP0ClrY5zUY