ஜவ்வரிசி - இரண்டு கப் பச்சைமிளகாய் - 10 உப்பு - 3 தேக்கரண்டி புளித்த மோர் - அரை கப் நெய் - அரை தேக்கரண்டி.
ஜவ்வரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பச்சைமிளகாய், உப்பு இவற்றை நன்கு அரைத்து ஜவ்வரிசியோடு சேர்க்கவும். ஓர் பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் வைத்து, கொதிக்கும் போது ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்துக் கரண்டியால் நன்கு கிளறவும். மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். அடி பிடிக்காமல் கிளறி ஜவ்வரிசி வெந்தவுடன் கீழே இறக்கவும். அத்துடன் மோர், நெய் இவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். துணியில் ஒரு சிறு தேக்கரண்டியால் மாவினை சின்ன வட்டங்களாக ஊற்றி, நல்ல வெயிலில் காயவைக்கவும். இது இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்றாக காய வேண்டும். பிறகு எடுத்து டின்னில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.