அடர் பனி காலை நேரம்,
எனக்கு பிடித்த தனிமையில்
மழை காற்று வீசும் மண்வாசனை ..!
அழகு மலர்களின் ஆலாபனை
மலரை உரசி செல்லும் வண்டுகள்
இது என்ன வாசம் இல்லாத மலரா ?...!
மனிதனின் வாழ்கை பூவுக்கும் உண்டா
அல்லது பூவின் வாழ்க்கை;
மனிதன் வாழ்கிறானா நானும் ...!
கூட உன் போல தெளிந்த
நீரோடையாய் இருந்தேன் .
மெல்லிய இதயத்தில்..!
இறைவன் சோதிக்க
வாசம் உள்ள மலராக வாழ
ஆச பட்டேன் முடியாமல் காகித ...!
பூவாகிவிட்டேன் இனி வரும்
என் இறுதி பயணத்தில்
வைக்கும் மலரிலாவது வாசம் வருமா !...