Author Topic: குண்டூர் சிக்கன்  (Read 783 times)

Offline kanmani

குண்டூர் சிக்கன்
« on: December 05, 2012, 01:15:44 PM »
சிக்கன்  500 கிராம்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
கடுகு  அரை தேக்கரண்டி
வெந்தயம்  கொஞ்சம்
தேங்காய் துருவல்– 3 தேக்கரண்டி
மல்லி  3 தேக்கரண்டி
மிளகு  1 தேக்கரண்டி
சீரகம்  1 தேக்கரண்டி
எண்ணெய்  4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்  3 தேக்கரண்டி
ஏலம் பட்டை கிராம்பு கலவை  1 தேக்கரண்டி
வெங்காயம்  100 கிராம்
தக்காளி  150 கிராம்
புளிக்காத தயிர்  2 தேக்கரண்டி
மல்லி இலை  சிறிது


சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் எடுத்து வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பு நிறம் வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும்.

ஆறியவுடன் பொடி செய்து, பின்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கி மணம் வந்தவுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

வதங்கியதும் அரைத்த மசாலா, தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு சிக்கனை சேர்த்து, பிரட்டி விட வேண்டும்.

சிறிது கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வேக விட வேண்டும். அடிக்கடி பிரட்டி விட வேண்டும்.
எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும். சிக்கன் வெந்தபின்பு மல்லி இலை தூவ வேண்டும்.இப்போது குண்டூர் சிக்கன் ரெடி.