Author Topic: முக்கனி பாயசம்  (Read 871 times)

Offline kanmani

முக்கனி பாயசம்
« on: November 28, 2012, 11:58:50 AM »
மாம்பழத் துண்டுகள் - அரை கப்,
வாழைப்பழத் துண்டுகள் - அரை கப்,
பலாப்பழச் சுளைகள் - அரை கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை  தேவைக்கேற்ப.

பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் மூன்றையும் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைத்து, ஆறிய பாலில் சேர்க்கவும்.  இந்தப் பாயசத்தைக் குளிர வைத்துப் பரிமாறலாம். உலர் பழங்களைச் சேர்த்து அலங்கரித்து அல்லது பழத் துண்டுகள் தூவியும் சாப்பிடலாம்.