Author Topic: ~ காசில்லா கனவுகள் ~  (Read 491 times)

Offline MysteRy

~ காசில்லா கனவுகள் ~
« on: November 27, 2012, 11:44:20 PM »


********************
காசில்லா கனவுகள்
********************


அடைய முடியா
ஆசைகள்
தொட முடியா
உயரங்கள் - என்று

எந்தப்
பாகுபாடும்
இதற்கில்லை

உன்னை
இறக்க வைக்கும்
மீண்டும் பிறக்க
வைக்கும்
அழவைத்து
சிரிக்க வைக்கும்

அம்பானியின்
மங்கை(மகள்)
உன் தங்கைக்கு
நாத்தனார் ஆக்கலாம்

உன்
காதலை மறுத்த
காதலியை
மனைவியாகவே
மாற்றலாம்

அவளோடு
சேர்ந்து சில
குழந்தைகளும்
பிறக்கலாம்...

தேன்நிலவை
கிரகம் தாண்டி
நிலவிலேயே
நடத்தலாம்

செவ்வாய் கிரகம்
சுற்றி வந்து
தேநீரும்
அருந்தலாம்.

வேண்டாத
மனைவியை
விவாகரத்தும்
செய்யலாம்

இறந்து போன
உறவுகளை
எதிரெதிரே
பார்க்கலாம்.

ரேசன் கடை
புளு(ழு )ங்கள்(ல்)
அரிசியை
புழுக்களுக்கே
போடலாம்

லஞ்சம் வாங்கும்
அயோக்கியனை
நடு ரோட்டில்
சாடலாம்

ஜாதி எல்லாம்
ஒழித்துவிட்டு
மனித ஜாதி
ஆக்கலாம்

மதத்ததை
எல்லாம்
மூட்டைகட்டி
நடுக்கடலில்
சேர்க்கலாம்

சுவிசில் இருக்கும்
நம் பணத்தை
நொடிப் பொழுதில்
மீட்கலாம்

ஏழை ஏங்கும்
இந்தியாவை
ஒரு நாளில்
பார்க்கலாம்

இப்படி
விலையில்லா
நிகழ்வுகளுக்கு
என்றும்
வாசல் திறக்கிறது

காசில்லா கனவுகள்..!