Author Topic: தர்பூசணி ரசம்  (Read 827 times)

Offline kanmani

தர்பூசணி ரசம்
« on: November 27, 2012, 09:58:42 AM »
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு,
சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கீறிய பச்சை மிளகாய் - 1,
தக்காளி - 2,
புளி - சிறிய கோலி அளவு,
நெய் - சிறிது,
தர்பூசணித் துண்டுகள் - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
தக்காளி, புளியை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து, கடைந்து, வடிகட்டவும். தர்பூசணித் துண்டுகளில் சிறிதை எடுத்துத் தனியே வைத்து
விட்டு, மீதியை மிக்சியில் அரைத்து வடிகட்டி, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்து வைத்துள்ள புளி - தக்காளி விழுதைச் சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் உப்பு, அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். பொங்கி நுரைத்து வரும் போது இறக்கி, தர்பூசணி ஜூஸ் விட்டு, கொத்தமல்லி சேர்த்து, தர்பூசணித் துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.