Author Topic: மாங்காய் குழம்பு  (Read 1276 times)

Offline kanmani

மாங்காய் குழம்பு
« on: November 27, 2012, 09:57:43 AM »
என்னென்ன தேவை?
மாங்காய் (மீடியம் சைஸ்) - 1,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 10,
தேங்காய் - அரை மூடி,
கடுகு - கால் டீஸ்பூன்,
சீரகம் - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கசகசா - கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க...
கடுகு,
கறிவேப்பிலை, எண்ணெய்.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் முதல் கசகசா வரையிலான பொருள்களை லேசாக வதக்கி, அரைக்கவும்.மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்டவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.