Author Topic: பழ மோதகம்  (Read 943 times)

Offline kanmani

பழ மோதகம்
« on: November 27, 2012, 09:55:23 AM »
என்னென்ன தேவை?

பச்சரிசி - கால் கிலோ
வாழைப்பழம் - 5 (ரசகதலி அல்லது பூவன்)
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு
உப்பு - தேவையான அளவு.



எப்படிச் செய்வது?

அரிசியை லேசாக வறுத்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். பழமோதகம் பலே!