Author Topic: கோல்டு க்ரீம்களை இப்படியும் பயன்படுத்தலாம்  (Read 643 times)

Offline kanmani

தற்போது அதிகமான பனிப்பொழிவு காரணமாக நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு பொழியும் அதிகமான மெர்குரி நமது வீட்டின் கட்டில், பீரோ போன்றவற்றிலேயே குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, நமது சருமத்தில் எத்தகைய குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நினைத்து பாருங்கள். அதிலும் அந்த மெர்குரி அதிக அளவில் சருமத்தில் படுவதால், சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையானது முற்றிலும் வறட்சியடைந்துவிடுகிறது.

சொல்லப்போனால், கோடைகாலத்தில் இருந்த நமது சருமத்தின் பளபளப்பு, மென்மைத் தன்மை இந்த குளிர்காலத்தில் இருக்காது. அவ்வாறு இருக்க வேண்டுமெனில் நாம் நமது சருமத்தை நன்கு பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலும் உடல் பெரும் சோர்வுடன் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு கூட ஒரு வித சோம்பேறித்தனம் இருக்கும். அந்த நேரத்தில் உடலை பராமரிக்க பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டு, வெறும் கோல்டு க்ரீம் மட்டும் இருந்தால், அவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

7 ways which cold creams are useful

* குளிர்காலத்தில் க்ரீம்களை காலை வேளையில் பயன்படுத்தினால், அவற்றால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருப்பதோடு, அழுக்குகளை எளிதில் உறிஞ்சிவிடும். இறுதியில் சருமத்தில் பிம்பிள் ஏற்பட்டு, பெரும் வலி உண்டாகும். ஆகவே இவற்றிற்கு பதிலாக கோல்டு க்ரீம்களை இரவில் படுக்கும் முன்பு சருமத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று தடவி, இரவு முழுவதும் ஊற வைத்தால், மறுநாள் சருமம் நன்கு மென்மையோடு பொலிவாக காணப்படும்.

* உதடு அடிக்கடி வறட்சியடையும் என்பதற்காக பயன்படுத்தும் லிப் பாம் போன்றும், கோல்டு க்ரீம்களை பயன்படுத்தலாம். இதனால் உதட்டில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் போய்விடும்.

* அதிக குளிர்ச்சியின் காரணமாக, முழங்கால் மற்றும் முழங்கைகளில் ஒருவித சுருக்கங்கள் போன்று காணப்படும். இத்தகைய பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, கோல்டு க்ரீம்களை தடவி வந்தால், தடுக்கலாம்.

* அதிக களைப்பின் காரணமாக முகத்திற்கு போட்ட மேக்-கப்பை பொறுமையாக நீக்க முடியவில்லையெனில் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போது மேக்-கப் ரிமூவரை எடுத்து செல்லவில்லை என்றால், அப்போது அவசரத்திற்கு கோல்டு க்ரீம்களை பயன்படுத்தி நீக்கலாம். அதற்காக இவற்றை பயன்படுத்தி அடிக்கடி நீக்கக் கூடாது. இது வெறும் அவசரத்திற்கு மட்டும் தான்.

* குளிர்காலத்தில் குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே வெடிப்புகள் வர ஆரம்பிக்கும் போதே கோல்டு க்ரீம்களை பயன்படுத்தினால், வெடிப்புகள் வராமல் தடுக்கலாம். ஆனால் அந்த வெடிப்புகள் பெரியதாக இருந்தால், அப்போது அவற்றிற்கு நிச்சயம் வெடிப்பை சரிசெய்ய விற்கும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்.

* நிறைய பெண்கள் முகத்திற்கு க்ரீம்கள் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு லோசன் என்று பயன்படுத்துவார்கள். ஒரு வேளை அவை இல்லாவிட்டால், அப்போது இந்த கோல்டு க்ரீம்களை எல்லா இடங்களுக்குமே பயன்படுத்தலாம்.

* வேக்ஸ் செய்த பின்னர் எப்போதும் அதிக வலி இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் என்றால் அது பெரும் தொல்லையாக இருக்கும். ஆகவே அந்த மாதிரி வேக்ஸ் செய்த பின்னர் ஏற்படும் வலியை குறைக்க, கோல்டு க்ரீம்களை பயன்படுத்தினால், வேக்ஸினால் ஏற்படும் வலியானது தடுக்கப்படும்