Recent Posts

Pages: 1 ... 5 6 [7] 8 9 10
61

ராஜா மகாராஜாக்களின் சகாப்தத்தில், பெண்களுக்கு இன்று போன்ற அழகு நிலையங்கள் இல்லை, தங்களை அழகாகவும், கவர்ச்சியாகவும், இளமையாகவும் வைத்திருக்க எந்த கிரீம் அல்லது சோப்பு, ஷாம்பு கூட இல்லை.
ஆயினும்கூட, வயதான ராணிகள் மிகவும் அழகாக இருந்தன. பழைய காலங்களில், இந்த ராணிகளைப் பெறுவதற்காக மட்டுமே பல போர்கள் நடந்துள்ளன.

பழைய நாட்களில், மன்னர்கள் ஆட்சியாளராக இருந்தபோது, ​​ராணிகள் தங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, ஏனெனில் ஒரு ராஜாவுக்கு பல ராணிகள் இருந்தன, மேலும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த ராணி ராஜாங்க ராணியாக இருந்தாள். அவர்களிடம் ஒன்றாக அதிக நேரம் செலவழித்தார். செல்வத்திற்கும் உரிமை அந்த ராணியிடம் இருந்தது.

பழைய கால ராணிகள் தங்களை அழகாக வைத்திருக்க இயற்கை வழிகளை மட்டுமே பயன்படுத்தின. பால் மற்றும் ரோஜா இலைகளை குளியல் நீரில் போட்டு குளித்தனர். இதன் காரணமாக, அவரது உடல் மென்மையாகவும் அழகாகவும் தோலில் இருந்து உயர்ந்தது.

ராணிகள் சில நேரங்களில் ஆலிவ் மற்றும் தேன் போன்றவற்றைக் கலந்து குளித்தனர் . இதன் காரணமாக அவர்களின் தோல் இளமையாகத் தெரிந்தது, ராணிகளும் தங்கள் உடலைப் பொருத்தமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்தனர், மேலும் வாளைப் பயன்படுத்தினர்.

பழங்கால ராணிகள் மிகவும் பளபளப்பான தோலைக் கொண்டிருந்தன, இதற்காக அவர்கள் முகத்தை வெண்மையாக்கும் முட்டையின் மஞ்சள் கருவை மதுபானத்தில் கலந்து முகத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க முகத்தில் பேஸ் பேக்குகளைப் பயன்படுத்தினர்.

ராணிகளின் குளிக்கும் நீரில் சந்தனப் பொடி, குங்குமப்பூ, பால், ரோஸ் வாட்டர் மற்றும் பல மூலிகைகள் கலந்திருந்தது, இது அவர்களின் சருமத்தை ஒரு குழந்தையைப் போல மென்மையாக்கியது.
62

கூட்டமாக அமர்ந்திருக்கும்போது ஒருவரை மட்டும் கொசு கடித்து கொண்டே இருக்கும். அப்போது அருகில் உள்ளவர்கள் உன்னுடைய ரத்தம் அந்த கொசுவிற்கு பிடித்திருக்கிறது. ஆகையால் தான் உன்னை கடிக்கிறது என்று விளையாட்டாக கூறுவார்கள். தற்போது இது உண்மை என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதனை மெடிக்கல் எண்டொமொலஜி இதழ் வெளியிட்டுள்ளது. கொசுக்களுக்கு O (ஓ) வகை ரத்தம்தான் மிகவும் பிடிக்கும் பிடிக்குமாம். மற்ற வகை ரத்தம் கொண்டவர்கள் ஒரு முறை கொசு கடிக்கிறது என்றால் 'ஓ' வகை ரத்தம் உள்ளவரை இரண்டு முறை அல்லது மூன்று முறை கடிக்குமாம்.

கொசுக்களுக்கு கார்பன்-டை-ஆக்சைடு மிகவும் அவசியம். கார்பன்-டை-ஆக்சைடு யாருடைய உடலில் இருந்து அதிகமாக வெளியேறுகிறதோ, அவர்கள்தான் கொசு அதிகளவில் கடிக்குமாம். இவற்றை கொசுக்கள் கண்கள் வழியாகவே கண்டறிவதாக ஆராய்ச்சியாளர் எஃப். டே கூறியுள்ளார்.

கொசுக்கள் தரையில் அமர்ந்திருந்து உற்றுநோக்கி பின்னரே உங்கள் மீது அமர்ந்து கடிக்குமாம். அதைப் போல் கருப்பு, கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளை அணிந்தால் விரைவில் உங்களை கொசுக்கள் கடிக்கும். கொசு உங்களை அதிகளவில் கடிக்க உங்களுடைய ஆடை முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
63

பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும்.

அழகான மஞ்சள் நிறமுள்ள மலர்களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம். நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.
வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.
இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
64

இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க. ஒரு வகையில் உண்மை தான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.

அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது. அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம். அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம். எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.

வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்.....

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிவிடும்.

பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்.. தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்..

சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?

சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.

அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும். இலையோட மேல் பக்கம், `தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது? குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு..

இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை. பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம். வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது..

நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்...
65

செட்டிநாட்டிலிருந்து எழுத்து கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர் கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

"படு... படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.
கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.
ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.
ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பிள்ளைகளை பார்த்து சொல்லியிருக்கிறார்.

"இந்தக் கார்களை கவனித்தீர்களா..?
இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது. இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது'' என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
அவமானம் ஒரு மூலதனம்...
இது புரிந்தால் வெற்றி நிச்சயம் நிச்சயம்...
66

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து காலையில் குளித்தவுடன் அணியலாம். மாதவிடாய் காலங்களில் ருத்ராட்சத்தை தொடுவதோ அணிவதோ கூடாது.

ருத்ராட்சத்தை மாலையாக அணிபவர்கள் 54 எண்ணிக்கை கொண்டதாகவும், 108 எண்ணிக்கை கொண்டதாகவும் அணிய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சம் யார் எந்த இடத்தில் அணியலாம் என்று அவர்களின் ஜனன ஜாதகத்தை வைத்து தான் கூற முடியும். ஜெபம் செய்யும் ருத்ராட்ச மாலைகளை கழுத்தில் அணிய கூடாது.
67

நம் உடல் நம்முடன் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலையான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனை உடலின் Bio Feedback-க்குகள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
உதாரணத்திற்கு தலைவலி என்றால், உங்கள் உடலின் நீரிழப்பு அல்லது அசுத்தமான குடல் இருப்பதைக் குறிக்கும். தொடர் மூச்சுத்திணறல், கொட்டாவி போன்றவை முளைக்கு அதிக ஆக்ஸிஜன் தேவை என்று எடுத்துச் சொல்பவை. உடல்கூறும் இந்த செய்திகள் நமக்கு ஆரம்பத்தில் சிறிதாகத் தோன்றலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல், புறக்கணித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டால், பிறகு மிகப்பெரிய சிக்கல்களுக்கு வழி வகுக்கும். உடல் வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகளையும், அதற்கான அர்த்தங்களையும் தெரிந்து கொள்வோம்.
...
#சளி, இருமல், காய்ச்சல்:

உடலில் நுழையும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடவும், அவற்றை அழிக்கவும் முற்படும்போது, நம் உடலின் வெப்பம் உயர்கிறது. இதனால் வரும் காய்ச்சல் நல்லது. ஜலதோஷம், இருமல் வந்துவிட்டால் நாள் முழுவதும் மூக்கை உறிஞ்சிக் கொண்டும், இருமிக் கொண்டும் இந்த சளி பாடாய் படுத்துகிறது என்று நொந்துகொள்வோம். சளி, இருமல் ஆகியவை நம் உடலினுள் இருக்கும் நச்சுக்கள், தூசி, பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கான சிறந்த வழி என்பதை உணர்ந்தால் இனி அதுபற்றி புலம்ப மாட்டோம்.
...
#சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகள்:

உங்கள் சருமம் மற்றும் கூந்தல் கூட உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும்.
இவற்றை வலுப்படுத்தக்கூடிய உடலின் அடிப்படை உள் கட்டமைப்பை பராமரிக்காவிட்டால் எவ்வளவு உயர் ரக ஷாம்பூக்கள், சருமப் பராமரிப்பு க்ரீம்கள், லோஷன்கள் என டப்பா, டப்பாக்களாக உபயோகித்து எந்தப் பலனும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சருமம் பொலிவிழந்து, வறண்டு காணப்பட்டால் உங்கள் உடலுக்கு அதிக தூக்கம், நீர், ஊட்டச்சத்துக்கள் தேவை அல்லது உங்கள் குடலுக்கு கூடுதல் கவனிப்பு தேவை என்று பொருள். கூந்தல் வெடிப்பு, முகத்தில் பருக்கள் தோன்றினால் அதற்கு ஹார்மோன்களின் சமநிலையின்மை அல்லது மனஅழுத்தம் காரணங்களாகின்றன.
...
#ஆற்றல் குறைவு:

எப்போதும் உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்தாலோ அல்லது அடிக்கடி காபி அருந்தும் பழக்கம் கொண்டிருந்தாலோ, உங்கள் உடலுக்கு போதுமான தூக்கம் மற்றும் நீர் பற்றாக்குறை இருக்கலாம். மேலும், உங்கள் மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை ஓட விட்டுக்கொண்டே இருப்பவராக இருக்கலாம். இவை உங்கள் ஆற்றலை உறிஞ்சுபவை. காபி குடிப்பதை நிறுத்துவதும், தேவையற்ற சிந்தனைகளை கட்டுப்படுத்துவதும் அதற்கான சிறந்த வழிகள்.
...
#வாய் துர்நாற்றம்:

இரவில் செரிமான மண்டலம் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் வேலையைச் செய்வதால், காலை பல் துலக்குவதற்கு முன் துர்நாற்றம் வீசும் வாயுடன் எழுந்திருப்பது இயல்பானது. எனினும் அது நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் நீடித்தால், உங்கள் குடல் ஆரோக்கியத்தை சரி பார்க்க வேண்டும். நாக்கு உட்பட நமது வாய்வழி ஆரோக்கியம், நமது முழு உடல் அமைப்பை எடுத்துக் காட்டும் வரைபடமாகும். தொடர்ந்து இருக்கும் மலச்சிக்கல் கூட குடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும்.
...
#கண்களில் கருவளையம்:

கண்களுக்கடியில் கருவளையம் தோன்றினால் சரியான உறக்கம் இல்லை என்போம். ஆனால், அதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. இது சிறுநீரக பிரச்னையையும் எடுத்துரைக்கும் அறிகுறி என்பது நமக்குத் தெரியாது. கருவளையத்தை உடனே மேக் அப் போட்டு மறைத்துக் கொள்வது அதற்கான தீர்வாகாது. சிறுநீரக ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வதும் முக்கியம். அதற்காக கருவளையம் இருப்பவர்களுக்கு, ஏதோ பெரிய பிரச்னை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சிலருக்கு பரம்பரைத் தன்மைக் காரணமாகக்கூட கருவளையம் வரலாம். ஆனால், பிற்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதன்மீது சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற பல வழிகளில் நம் உடல் நம்மிடம் பேசுகிறது. நாம் அந்த சமிக்ஞைகளை கவனமாகக் கேட்கும்போதுதான், அதை ஒப்புக்கொள்ளவும், ​​நம் உடலுடன் ஒத்துப்போகவும் முடியும்; அதே வேளையில் அதற்காக ஏதாவது நன்மை செய்யவும் முடியும்.
68

பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
பூண்டுபற்க்கள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
பூண்டுபற்களை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.
வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரத்தில் முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்...
69

* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
👉 இருதயம் சீராக இயங்குகிறது.
👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
👉 கண் பார்வை
தெளிவடைகிறது.
👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
👉மலச்சிக்கல் நீங்குகிறது.
👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.
70
ஆன்மீகம் - Spiritual / Re: MORNING PRAYER ✝️ 🙏
« Last post by MysteRy on October 24, 2025, 07:45:12 AM »
Pages: 1 ... 5 6 [7] 8 9 10