FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 23, 2012, 11:11:23 PM
-
என்னென்ன தேவை?
பப்பாளி சிறியதாக - 1,
வாழைப்பழம் - 1,
நெய்யும், வெண்ணெயும் சேர்த்து - 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 2 கப்,
பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,
விருப்பமான ஏதேனும் ஒரு எசென்ஸ் - அரை டீஸ்பூன்,
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை,
வறுத்த பாதாம்,
முந்திரி - சிறிது.
எப்படிச் செய்வது?
பப்பாளி, வாழைப்பழங்களை தோல் நீக்கித் துண்டுகளாக்கி, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவை 2 கப் இருக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கைவிடாமல் கிளறவும். கலவை சிறிது கெட்டியானதும், பால் பவுடரை கரைத்துச் சேர்க்கவும். முந்திரி, பாதாம், நெய் சேர்க்கவும்.
எசென்ஸ், கலர் சேர்த்து இன்னும் சிறிது நேரம் கிளறவும். மீண்டும் சிறிது நெய், வெண்ணெய் சேர்த்துக் கிளறி, கலவை சுருண்டு வரும் போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும். விருப்பமானால் சில்வர் ஃபாயில் கொண்டு அலங்கரிக்கலாம்.