FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on November 23, 2012, 09:12:38 AM

Title: காலம் எழுதிய‌ கவிதைகள்
Post by: தமிழன் on November 23, 2012, 09:12:38 AM
காற்றுக்காக ஜன்னல் திறந்து
உட்காரும்போது
தாழ்வாரத்து விட்டத்து கூண்டில்
தொங்கி விளையாடும்
ஊடல் குருவிகள்......

தென்றலின் பாடலுக்கு
தப்பாமல் தலையாட்டும்
பூந்தொட்டி மலர்கள்....

வாசல்வரை வந்து
வாலாட்டி வழியனுப்பும்
எதிர் வீட்டு நாய்க்குட்டி...........

கட்டுமான இறுக்கங்களை பிளந்து
வேர்விட்டு முளைத்திருக்கும்
அரசமரக் கன்று...........

தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பத் திரும்ப‌
தடவிப் பார்க்கும்
கண்ணற்ற பிச்சைக்காரன்.....

எல்லாப் பரப்பிலும்
சிதறிக் கிடக்கின்றன‌
காலம் ஏற்கெனவே எழுதிய‌
கவிதைகள்....
Title: Re: காலம் எழுதிய‌ கவிதைகள்
Post by: பவித்ரா on December 02, 2012, 02:59:03 AM
ungala matum paarkama ungal kavithaiyil ellaraiyum paarkarenga nalla iruku pulavare
Title: Re: காலம் எழுதிய‌ கவிதைகள்
Post by: Thavi on December 03, 2012, 01:58:36 AM
தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பத் திரும்ப‌
தடவிப் பார்க்கும்
கண்ணற்ற பிச்சைக்காரன்.....

 nice line thamilan machi keep write more  :D
Title: Re: காலம் எழுதிய‌ கவிதைகள்
Post by: Global Angel on December 04, 2012, 12:29:32 AM
உண்மைதான் கற்பனை கண் கொண்டு பார்த்தால் எல்லாமே கவிதைதான் ... கவிதை நன்று தமிழன்