சென்னை விவேகானந்தர் இல்லம் ஒரு வரலாற்று பதிவு !!! (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F62281_307369359368571_323222335_n.jpg&hash=69ee2bfb303af949f8fab6c14249f22a8a40d119) (http://www.friendstamilchat.com)
சென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். ஐஸ் ஹவுஸ் என்பது இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம்
1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தளமாக விளங்குகின்றது.
அன்றைய கால கட்டத்தில் ஐஸ் தயாரிக்க தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சமயத்தில் கப்பல் மூலம் ஐஸ் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பிரெடெரிக் டுடோர் என்ற ஆங்கிலேயரால் இது நிர்மானிக்கபட்டது தொழில் நலிவடைந்ததால் 1880 ஆம் ஆண்டு பிலிகிரி அய்யங்காரிடம் இந்த கட்டிடம் கை மாறியது. அவர் இதை புனரமைப்பு செய்து கேமன் கோட்டை (keman castle) என்று பெயர் வைத்தார். இந்த சமயத்தில் தான் விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்தார் அய்யங்கார் விவேகானந்தரின் பால் உள்ள பற்றின் காரணமாக அவரை தனது இல்லத்தில் தங்குமாறு கோற, விவேகானந்தர் 9 நாட்கள்(6 பிப்ரவரி 1897 லிருந்து 14 பிப்ரவரி) அங்கு தங்கி சென்றதாக தகவல். இங்கு அவர் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது, விவேகானந்தர் சென்ற பிறகு அவரின் நினைவாக ஒரு நிரந்தர மையத்தை விவேகானந்தரை பின்பற்றுபவர்களுக்காக உருவாக்கினார் அய்யங்கார்.
1906 வரை இந்த மையம் செயல்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது பின்னர் இந்த இடம் ஒரு ஜமிந்தாரின் வசம் சென்றது. பின்னர் இந்த இடம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு மகளீர்க்கான விடுதியுடன் கூடிய பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. 1963 இல் இந்த இடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது. விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி 1997 இல் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்திற்கு குத்தகையாக விடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த இடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண மடத்தவர் அங்கு நிரந்தர புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் கூடிய கண்காட்சியை வைத்திருக்கின்றனர். மேலும் இதனுள்ளே ஒரு தியான மண்டபம் ஒன்று உள்ளது இங்கு தான் விவேகானந்தர் தியானம் செய்ததாக அறிகிறோம். சிலர் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்தவர் என்ற பெயரில் RSS வசமாகி விட்டதாக சொல்கின்றனர். அது என்னமோ உண்மை தானே தியானதில் ஆரம்பித்தால் ஆன்மீகத்தில் நுழைந்து இந்துயசத்தில் தானே அது போய் முடியும். எது எப்படியோ கடற்கரையின் ஓரத்தில் அழகான அந்த கட்டிடம் உண்மையில் மெரினாவின் மகுடத்தில் பொதித்த ஒரு விலை மதிப்பற்ற தாகவே விளங்குகிறது