FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 22, 2012, 10:06:37 PM

Title: ~ மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க !!! ~
Post by: MysteRy on November 22, 2012, 10:06:37 PM
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F405025_307043489401158_51194901_n.jpg&hash=f85386cb3e2335979464eadc0d08ac48d148d64b) (http://www.friendstamilchat.com)

மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்.

*கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.

* போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.

*மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

*குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.

* இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.
*இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.

* பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும்.
*உங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா? மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும்.

*உங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.

*குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது. அவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.