FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 20, 2012, 12:05:16 AM

Title: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை
Post by: kanmani on November 20, 2012, 12:05:16 AM
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். அத்தகைய ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து, விடுமுறை நாட்களில் நிம்மதியாக ரசித்து ருசித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த ஆந்திரா ஸ்டைலில் ஃபிஷ் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

andhra style fish fry recipe

தேவையான பொருட்கள்:

மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்)
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

மீனை நறுக்கி நன்கு கழுவி, பின் அதன் மேல் உப்பை தடவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மசாலாவை மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை ரெடி!!!