FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on November 18, 2012, 05:57:31 AM

Title: மெஹந்தி வெச்சு கலர் பிடிக்கலையா? இத படிச்சு பாருங்க....
Post by: kanmani on November 18, 2012, 05:57:31 AM
இன்றைய காலத்தில் மெஹந்தி பிடிக்காத பெண்களைப் பார்கவே முடியாது. அதிலும் இந்த மெஹந்தியை இந்தியாவில் உள்ள பெண்கள் தான் அதிகம் விரும்பிப் போடுவார்கள். இதன் காரணமாகத் தான், இந்த மெஹந்தியை வட இந்தியாவில், பெண்களின் திருமணத்திற்கு முன் 'மெஹந்தி திருவிழா' என்ற ஒன்றை கொண்டாடுகின்றனர். மேலும் ஏதேனும் விழா என்றால் இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் கைகளை மருதாணி அல்லது மெஹந்தியால் அழகுப் படுத்திக் கொள்கின்றனர்.

how darken the colour mehendi
அதிலும் திருமணத்தின் முன் இந்த திருவிழா கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால், கைகளில் வைக்கும் மருதாணி அல்லது மெஹந்தி, பெண்களின் கைகளில் எவ்வளவு நிறத்தில் பிடிக்கிறதோ, அந்த நிறத்தின் அளவு அவர்களது கணவர்கள் இவர்களை காதலிக்கின்றனர் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. அதை இன்னும் நம்பித் தான் இன்றும் இந்த சடங்கு நடக்கின்றது. ஒரு வேளை கைகளில் மருதாணி அல்லது மெஹந்தி நிறம் பிடிக்கவில்லையென்றால், அப்போது பெண்கள் படும் கவலைக்கு அளவே இருக்காது.

ஆனால் உண்மையில் என்ன காரணமென்றால், நமமு உடலில் எவ்வளவு வெப்பம் உள்ளதோ, அதை வைத்து தான் கைகளில் வைக்கும் மருதாணி அல்லது மெஹந்தி நிறம் பிடிப்பது உள்ளது. ஆகவே அவ்வாறு எப்போது மருதாணி வைத்தாலும், நிறம் பிடிக்கவில்லை என்றால் கவலைபட வேண்டாம். அதற்கு ஒரு சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போமா!!!

* இரவில் படுக்கும் போது மருதாணி இலை அல்லது ஹென்னாவை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். அதிலும் டீ டிக்காசனில் ஊற வைத்தால், நன்கு நிறம் பிடிக்கும்.

* காப்பி பவுடரை வைத்து நிறம் வர வைக்கலாம். அதற்கு இரவில் ஹென்னாவை ஊற வைக்கும் போது, அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் காப்பி பவுடரை சேர்த்து ஊற வைத்தால், மறுநாள் அதனை வைக்கும் போது நல்ல நிறத்தில் பிடிக்கும்.

* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் கைகளில் மருதாணி அல்லது ஹென்னாவை வைத்தப்பின்பு, அது காய்ந்ததும், அதன் மேல் இந்த எலுமிச்சை கலவையை வைத்து, அது காய்ந்ததும் கழுவிப் பார்த்தால், நல்ல நிறம் பிடித்திருக்கும்.

* மெஹந்தி அல்லது மருதாணியை கைகளில் வைத்தால், குறைந்தது ஆறு மணிநேரமாவது வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆறு மணிநேரம் ஆனப் பின்பு தான் அந்த எலுமிச்சை கலவையை வைக்க வேண்டும்.

* அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கிராம்பை போட்டு வறுக்க வேண்டும். பின் அதனை இறக்கி, அந்த வாணலியிலிருந்து 4 இன்ச் மேலே கைகளை நீட்டி, சற்று நேரம் ஆவி பிடிக்க வேண்டும். அதன் பின் மெஹந்தியை வைத்தால், நிறம் நன்கு டார்க் ஆகும்.

* இது ஒரு பழைய முறை. அதாவது, வலி நிவாரணியை கைகளில் தடவினால் நிறம் பிடிக்கும். அது எப்படியெனில் மெஹந்தியை கைகளில் வைத்து காய்ந்ததும், அதன் மேல் வலி நிவாரணியை தேய்த்தால், நிறம் பிடிக்கும். எப்படியெனில் அந்த வலி நிவாரணி சருமத்தின் மேல் படும் போது ஒருவித வெப்பத்தை உருவாக்கும். இதனால் மெஹந்தி நல்ல நிறத்தில் இருக்கும்.

வேறு எப்படியெல்லாம் செய்தால், மருதாணி அல்லது மெஹந்தி நன்கு பிடிக்கும் என்று தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.