FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on November 13, 2012, 07:39:08 AM

Title: ~ வல்க்ரோ- நம்மில் எத்தனை பேர் இதன் பெயர் அறிவோம் !! ~
Post by: MysteRy on November 13, 2012, 07:39:08 AM
வல்க்ரோ- நம்மில் எத்தனை பேர் இதன் பெயர் அறிவோம் !!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F554082_302780156494158_2093783330_n.jpg&hash=6a11dd0ee40efac7f2f935f697af3498fba8554c) (http://www.friendstamilchat.com)

"வல்க்ரோ ", நம்மில் சிலர் மட்டுமே இதன் பெயரை அறிந்திருப்போம்.ஆனால் தினமும் எதாவது ஒரு வகையில் எதாவது ஒட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டு இருப்போம்.

காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள 'வல்க்ரோ' என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டுபிடிப்புக்கு 'வல்க்ரோ' என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் 'வல்க்ரோ'வுக்கு உண்டு.