FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on November 12, 2012, 10:25:34 PM

Title: ~ மேகமறைவில்.சூரியன் சோகமறைவில்.இன்பம் ~
Post by: MysteRy on November 12, 2012, 10:25:34 PM
மேகமறைவில்.சூரியன்
சோகமறைவில்.இன்பம்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.wecreatenyc.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F10%2Fcosmic-dream.jpg&hash=d1dbed474f88bfae611524c8bb9e5a24227dd72d)

இந்தவாரம் என்ன எழுத வேண்டிவருமென
எண்ண அலைகளின் அலைபாய்வோடு
சின்ன சின்ன  ஆசைகளோடு தளம் வந்தேன்
தளம்வந்து நுழைந்து , படம்கண்டு பிழன்றேன் .

அந்தோ! ஒன்றுமில்லா படமென்றாலும்
ஒப்புக்காவது வரிபுனைந்து ,ஒப்பேற்றிடலாம்
இப்படத்திற்கென்ன செய்வதென, ஒன்றும்புரியாது
இலக்கின்றி,  இயந்திரத்தனமாய் திரிந்திடும்   
பரபரப்பு பொருந்திய வான் மேகம் போல
கற்பனைக்குதிரைகள், வெவ்வேறு  கோணங்களில்
வெவ்வேறு எண்ணங்களில்  கட்டற்று திரிந்தன .

இறுதியில், இரண்டே புள்ளிகள் உயிராய் கிட்டின

இருக்கின்ற, மின்சாரத்தட்டுப்பாட்டின் கட்டுப்பட்டினில்
தமிழகத்தில்,பளிச் ஒளியுடன் பல்லைக்காட்டி திரிந்தால்
தமிழர்கள் தன்னை உருக்கி ஒருவழியாக்கிடுவரென
அஞ்சித்தான் , தன் ஒளியை சுருக்கி, மேகத்தின் பின் 
ஓடி ஒளிந்து தலைமறைவாகின்றதோ ?
உலகின்  ஒளிமயமான , மிகப்பெரிய ஒளிபெருக்கி  .

அடுக்கடுக்காய் , ஒன்றன்பின் ஒன்றென இன்னல்கள்
மேகங்களின் ரூபத்தினில், மறைத்திடும் போதிலும்
தன்னை முன்னேற்றிக்கொண்டு ,அதனால்
உலகிற்க்கே ஒளிதர முயன்றிடும்,சூரியனின்
உயர் எண்ணம் அதை என்ன சொல்வது ....
Title: Re: ~ மேகமறைவில்.சூரியன் சோகமறைவில்.இன்பம் ~
Post by: Thavi on November 14, 2012, 01:20:57 AM
REMBA NALLA IRRUKU ALEA THODARNTHU ELUTHUNGA VAALTHUGAL
Title: Re: ~ மேகமறைவில்.சூரியன் சோகமறைவில்.இன்பம் ~
Post by: MysteRy on November 14, 2012, 07:20:22 AM
Thavi .. ithu oviyam ku prepare panathu but post podda mudila

Coz Outstation Poithaen

Athan Ithula Pottutaen

Thanks Thavi  :) All credit goes to my fren  :) :)