FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: kanmani on November 10, 2012, 12:52:26 AM

Title: செல்’பேச்சை குறைங்க... இல்லைன்னா ‘செல் திசு’ சூடாயிரும்
Post by: kanmani on November 10, 2012, 12:52:26 AM
செல்போனை அளவிற்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் செல் திசுக்கள் சூடாகிவிடும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு வருவதோடு ஏதேனும் சிறிய கட்டிகள் இருந்தால் கூட அது பெரிதாகிவிடும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் முக்கியமான எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.

அழிந்து வரும் குருவிகள்

பச்சைப் பசுமையான மரங்கள் இருந்த இடங்களில் காங்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன. அந்த கட்டிடங்களின் மேல் இப்போது வரிசையாக செல்போன் கோபுரங்கள் முளைத்து காக்கை, குருவி இனங்களைக் கூட அழித்து வருகின்றன என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

செல்போன் நிறுவனங்களில் பிரச்சாரம்

செல்போன் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் இல்லை இது டிஎன்ஏவை சிதைக்காது என்று செல்போன் நிறுவனங்கள் பசப்பு வார்த்தைகளை தெரிவித்து வருகின்றன. சர்வதேச ஆணையம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்ப குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும் என்றும் சப்பைக் கட்டு கட்டுகின்றன நிறுவனங்கள்.

செல் திசுக்கள் சூடாகும்

செல்போன் நிறுவனங்களின் பொய்யான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏவை பாதிக்கா விட்டாலும் அது செல் திசுக்களை சூடாக்கும் என்று தெரிவித்துள்ளது.

மூளைப் புற்றுநோய் வரும்

செல்போன்களின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம். இதனால் மூளைப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

உலக சுகாதார நிறுவனம்

இதை உறுதிப் படுத்தும் வகையில் 2000-லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் கதிகமாக செல்போன் உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காதொலி நரம்பு பாதிக்கும்

10 வருடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களின் மூளைக்கும் காதிற்கும் இடையிலான மிருதுவான `அகோஸ்டிக் நியூரினோமா' எனப்படும் காதொலி நரம்பு அதிகஅளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மற்றொரு ஆய்வு குறிப்பிடுகிறது.

உடல் வெப்பநிலை அதிகரிக்கும்

நமது மூளையில் மின்சார ஓட்டம் உள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது. தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் இந்திய ஆய்வாளர்கள்.

என்னென்ன பிரச்சினை வரும்

அலைபேசி வெளிவிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புத்தி பேதலிக்கும் மூளைக்காய்ச்சல், காது செவிடா கும் தன்மை, உமிழ்நீர் சுரப்பிகளில் கட்டி, விந்து உற்பத்தி குறைதல், இயல்பிற்கு மாறான இதயத்துடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

விந்தணு உற்பத்தி குறையும்

2004-ல் அலைபேசி உபயோகிக்கும் ஆண்களை ஆய்வு செய்தபோது அடிக்கடி செல்போன் உபயோகிக்கும் ஆண்களுக்கு 30 சதவீதம் விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பது தெரியவந்தது.

செல்போன் கோபுரம் வேணுமா?

இந்த பாதிப்புகள் உங்களுக்கு வராமல் இருக்க கூடுமானவரை செல்போனில் பேசுவதை குறையுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். இ.மெயில், லேண்ட்லைன் உபயோகித்தால் சிக்கல் ஏற்படாமல் தப்பிக்கலாம் என்று கூறும் நிபுணர்கள். வீட்டு மொட்டை மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் கொடுக்காதீர்கள் என்கின்றனர்.