FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: fcp.shan on November 09, 2012, 08:31:30 AM

Title: பிகர்களை உஷார் பண்ணுவது எப்படி..?.
Post by: fcp.shan on November 09, 2012, 08:31:30 AM


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில
ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால்
அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன்போட்டு தைத்துக்கொள்ளவு ம்.

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம்இல்லாதவாறு சில
டி-ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும்
உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி – ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள்
இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது
ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட
கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக்
வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ,
அப்பாச்சியாவோ, சி.பி சாட்டாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட
இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான்
உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க விடலாம்.
அவங்களுக்கும்திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம்
வேணுமில்ல!.

7) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்’ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like
that,Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும்.
பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம்.
இதுலையே உங்க ஆளு பாதி அவுட். அடடா எல்லாத்தையும்
சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம ்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல
மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.
மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட்
வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க
மிஸ்டுகால் கொடுக்க கூடாது. இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீனா,
ம்ம்ம்ம்ம்ம்…
நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்…