உபயம் பனித்துளி சங்கர்
இறந்துபோன உடலில் எல்லாம்
மீண்டும் உயிர்பிக்கிறது மற்றொரு உடல் .
கட்டி அனைத்துக்கொண்டு சிரிப்பதா !?
இல்லைக் கட்டித் தழுவிக் கொண்டு அழுவதா !?
மாண்ட கணவனின் மேல்
மீளும் நினைவுகளுடன் கதறுகிறாள்
சற்றுமுன் இந்த உலகம் பார்த்த
கைக்குழந்தையுடன் ஒருத்தி !.
ஆயிரம் உறவுகள் ஆறுதல் சொல்லியும்
வற்றிபோகாத கண்ணீர் அருவிகள்
அவளின் விழிகளில் .
மரணத்தின் முடிவில் இத்தனை இரனங்களா!?
முதல் முறை சுமக்கிறேன்
பணம் தேடிவந்த நண்பனின்
பிணத்தை வெளிநாட்டில் !!...
Unmaiyana visayangalai unarchi purvamaai irruku peom superp pavima vaalthugal intha kavithai ellorum manathilum oru thakkathai erpatuthum