FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: kanmani on November 06, 2012, 12:07:43 PM

Title: தங்களின் கணினியில் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நல்ல நிலையில் உள்ளதா?
Post by: kanmani on November 06, 2012, 12:07:43 PM
தங்களின் கணினியில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன என்பதை அறிவது எப்படி?

தங்களின் கணினியில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன, என்று தங்களுக்கு தெரியுமா? ம்ம்ம் நமக்கு தெரிந்த ஹார்ட்வேர் சாதனங்கள் ஹார்ட்டிஸ்க், மவுஸ், கீபோர்டு, மதர்போர்டு போன்ற சில சாதனங்கள் தெரியும். இன்னும் பல ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. இவை அனைத்தும் சரியாக தான் உள்ளனவா, நல்ல முறையில் அதன் பணிகளை செய்கிறது அல்லது ஏதேனும் பிரச்சனை உள்ளனவா? என்று எப்படி அறிவது.


நண்பா! நமது மென்பொருட்களின் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு உடனே தெரிய வாய்ப்பு உள்ளது..அதனை சரி செய்து கொள்ளலாம். ஆனால் அதுவே நமது ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு தெரிய வாய்ப்பேயில்லை, கடைசியில் அதன் செயல்பாட்டை இழக்கும் போதே அதன் பிரச்சனை தெரியும்....ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது அதிக செலவை வைக்கும்.. கவனம்..

இப்போ பதிவோடு மேட்டருக்கும் வருவோம்... இப்போ பிரச்சனை என்னனா? நம்ம ஹார்ட்வேர் சாதங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா என்று அறிவது தான்.? கவலை வேண்டாம் இந்த குறையை போக்க ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. நானே இதை பயன்படுத்தி பார்த்தேன் மிக அருமை. நண்பா!

இந்த மென்பொருள் பெயர் PCWIZARD. இதனை தங்களின் கணினியில் நிறுவியவுடன், இது தங்களின் கணினியின் ஹார்ட்வேர் சாதங்களின் நிலையை சற்று ஆழமாக ஸ்கேன் செய்து, அவையின் தற்போதய நிலை, மற்றும் அவை நல்ல இயங்கு நிலையில் உள்ளனவா என்று கூறும். இதன் சிறப்பு என்ன என்றால். இது ஒவ்வொரு சாதனமாக தனித்து ஆராய்ந்து கூறும். மேலும் ஏதேனும் சாதனத்தில் கோளாறு இருந்தால், அதை மாற்றிவிடுமாறு கூறும்... மேலும் பல சுவரிசியமான தகவல்களை தருகிறது. நண்பர்களே.. உடனே பயன்படுத்துங்கள்.