FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: kanmani on November 06, 2012, 11:07:19 AM

Title: டிரைவிங் தவறுகளை புட்டு புட்டு வைக்கும் சிமுலேட்டர்
Post by: kanmani on November 06, 2012, 11:07:19 AM
டிரைவிங்கில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சரியாகவும், விதிகளை அனுசரித்தும் சரியாக கார் ஓட்டுகின்றனரா என்பதை துல்லியமாக சொல்லிவிடுகிறது சிமுலேட்டர் கருவி. ஏற்கனவே காரில் நேரடி டிரைவிங் பயிற்சி பெற்றாலும் கூட டிரைவிங்கை திறனை மேம்படுத்திக் கொள்ள சிமுலேட்டரில் டிரைவிங் பயற்சி எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

சிமுலேட்டர் டிரைவிங் பயிற்சியை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆட்டோமொபைல் அசோசியேசன் ஆப் சவுத் இந்தியா என்ற நிறுவனம் கொடுத்து வருகிறது. தினசரி அரைமணி நேரம் வீதம் 5 மணிநேரம் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

காரில் இருப்பது போன்று ஸ்டீயரிங், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகிய அனைத்தும் இந்த சிமுலேட்டர் எந்திரத்தில் இருக்கும். தவிர, சிமுலேட்டர் கருவியில் சாலையில் செல்வது போன்ற உணர்வை தரும் திரையும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதை பார்த்து நீங்கள் காரை ஓட்டுவது போன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த இடத்தில் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை ஸ்டிமுலேட்டர் துல்லியமாக கண்டுபிடித்து சொல்லிவிடும். அதனை சரிசெய்து மீண்டும் ஓட்டும் வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை முடித்தால் சாலையில் நீங்கள் பதட்டம் இல்லாமல் காரை ஓட்டிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.