FTC Forum
Special Category => வலை செய்திகள் => Topic started by: kanmani on November 06, 2012, 10:57:42 AM
-
கிசாஷி பிரிமியம் செடான் காரின் விலையில் ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்குவதாக மாருதி அதிரடியாக அறிவித்துள்ளது.
மக்கள் கார் தயாரிப்பாளர் பட்டத்தை பெற்ற மாருதியின் அதிக விலை கொண்ட பிரிமியம் கார்தான் கிசாஷி. டி+ செக்மென்ட் மார்க்கெட்டில் ஓரளவு பங்களிப்பை நிச்சயம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிசாஷியை மாருதி அறிமுகம் செய்தது.
இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மாருதியின் எதிர்பார்ப்பு அனைத்தையும் கிசாஷி புஸ்வானமாகிவிட்டது. விற்பனையில் கிசாஷி மிகவும் மோசமான இடத்தில் இருந்து வருகிறது.
இதனால், ஸ்டாக் உள்ள கிசாஷி கார்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்துவிட்டு இந்த காருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு மூடுவிழா நடத்த மாருதி முடிவு செய்திருக்கிறது. இதனால், கிசாஷிக்கு ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்குவதாக மாருதி அறிவித்துள்ளது.
ரூ.17.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கிசாஷியின் டாப் என்ட் காருக்கு இந்த அதிரடி தள்ளுபடி சலுகையை மாருதி அறிவித்திருக்கிறது.