FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 06, 2012, 09:55:53 AM
-
மௌனம் மௌனம் மௌனமென
மௌனமாய் மூச்சுக்கு முன்நூறு முறை
மௌனத்தையே மனதினில்
மௌன மனனம் செய்தவளாய்
மௌனத்தையே மௌனித்து ,பின்
மௌனத்தையே தியானித்தவளே !
மௌனமனதினில் மகா மௌனியாய்
மௌனராகம், மௌனகீதம்
மௌன நினைவு , மௌன புரட்சி என
மௌனத்திர்க்கே பாடம் புகட்டிடும்
மௌனகுருவாய் தனை உலகிற்கே
மௌனமாய் பறைசாற்றிக்கொண்ட
மௌன மோகினியே !!
மௌனம் அதன் வாசத்தின் மீது கூட
லேசான பாசமும் கொள்ளாதவன் நான்
இன்று மௌனத்தை மிக மிக நேசிக்கின்றேன்
நேசிப்பதோடின்றி , உயிராய் சுவாசிக்கின்றேன்
ஆம், உன் மீதான உயர் நேசத்தால்
என் முன்னால் நேசமான சப்தத்தின் துணையோடு
உன்னால் உட்புகுத்தப்பட்ட நிசப்தத்தை (மௌனம்) எதிர்த்து
பின்னாளில் " கவிதையில் ஓர் யுத்தம் செய்வேன் " என
இப்போதே நிதர்சனமாய் தெரிவிக்கின்றேன்
உன் மீதான உயர் நேசத்தால் ......
" கவிதையில் ஓர் யுத்தம் செய்வேன் "
-
nala yutham kaviganre seiga mounatha vida sirantha mozhi world la vera ena iruka mudium? intha mozhi ellarukum purijudurathu illa palar puirum nu soluvanga but thapu thapa than purijukuvanga intha mozhi manasu pesum mozhi nice varigal
-
அடடே !
கவிதை பகுதியில் களோபரம் !
துவங்காமல் இருக்க வேண்டும் கலவரம் !
எது எப்படியோ , எனக்கு வேண்டியது உன் பாதுகாப்பான நிலவரம் !
ஏனெனில்,எனக்கு தெரிந்து,
நீ , சிறு இடைவெளிக்கு பிறகு இம்மன்றத்திற்கு கிடைத்த அரும்வரம் !
வாழ்த்திற்க்கு மிக்க ஆனந்தம் !
தொடர்ந்து ப(டி) திக்கவும்!!