FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on November 05, 2012, 09:16:18 PM

Title: புத்தன் - 4
Post by: ஆதி on November 05, 2012, 09:16:18 PM
விழுவதிலேயே
கவனமாய் இருக்கிறது அருவி

விழுதலைக் குறித்த‌
எவ்வெதிர்ப்புக்களும்
எம்மறுப்புக்களும் இன்றி
சல்லடையில்
சித்தாளொருத்தி லாவகமாக கொட்டும்
வெண்மனலென‌
விழுந்து கொண்டே இருக்கிறது அது

விழுதலின் வேகத்தில் ஜனிக்கும்
காற்றின் பயண திசையை பற்றி
எவ்வக்கறையும் கொள்ளாமல்
அது விழுந்து கொண்டே இருக்கிறது

மோதலால் கூர் மழுங்கி
மேனி வளுவளுப்பான‌ பாறைகளிடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்

விழுதல் இறக்கும்
வற்றியத்தருணத்திலும்
வெயில்வள்ளி படர்ந்த
வெம்மை பாறைகளில்
தவமிருக்கும்
விழுதல் வேண்டி
Title: Re: புத்தன் - 1
Post by: Global Angel on November 06, 2012, 06:02:18 PM
Quote
மோதலால் கூர் மழுங்கி
மேனி வளுவளுப்பான‌ பாறைகளிடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்

விழுதல் பற்றிய ஒரு அருமையான கவிதை .. சில விழுதலில் பல சந்தோசங்கள் ரசனைகள் லயிப்புகள் காத்திருப்புகள் இப்படி பல சம்பவங்கள் அமைந்து விடுகின்றன இல்லையா .... விழுதல் என்பது பொதுவாக தோல்விகளையே குறிப்பிட பட்டிருந்தாலும் அந்த தோல்விகள் கூட வேண்டி பெறுகின்ற சம்பவங்கள் இடங்கள் அதன் பின்னான சந்தோசங்கள் அருமை ... தங்கள் அருவி விழுதல் அருமை  .. பல விழுதலை மனதுள் விழுத்தி சென்றுள்ளது
Title: Re: புத்தன் - 1
Post by: ! SabriNa ! on November 07, 2012, 01:08:25 PM
nice....aadhi!!!!!
Title: Re: புத்தன் - 1
Post by: ஆதி on November 09, 2012, 10:24:38 PM
நன்றிங்க குளோபல் ஏஞ்சல், இங்கே விழ்தல் என்பது இயல்பை குறிப்பது, விழுவதுதான் அருவியின் இயல்பு அந்த இயல்பு மாறமல் இருத்தலே ஜென்

அந்த தத்துவத்தின் அடி படையில் எழுதப்பட்டது, நன்றிங்க‌

====

@ நன்றி சர்மி
Title: Re: புத்தன் - 2
Post by: ஆதி on November 09, 2012, 10:25:10 PM
தலை தொங்க சிலுவையில்
மரணித்த‌ புத்தன்

சாகும் முன்
"ஏலி ஏலி லெமா சபக்தானி"
என்றானாம்

அதை கேட்டவ‌ர்க‌ள் ப‌ல‌ரும் சொன்ன‌ர்கள்
அவன் புத்தன் தான் என்று

இப்படித்தான்
நீங்க‌ளும் நானும் ம‌ற்ற‌ பிற‌ரும்
ப‌ல‌ புத்த‌ன்க‌ளை கொன்றுகுவிக்கிறோம்
ந‌ம்மிலும் பிற‌ரிலும் யாவிலும்
Title: Re: புத்தன் - 2
Post by: Global Angel on November 11, 2012, 08:54:55 PM
சுடலை ஞானம்  இதுதான் .. ஹிஹி
Title: Re: புத்தன் - 2
Post by: micro diary on November 21, 2012, 05:04:26 PM
aathi enaku oru doubt puththan epo siluvaila thonginan:S
Title: Re: புத்தன் - 2
Post by: ஆதி on December 02, 2012, 06:00:16 AM
புத்தன் என்றல் விழிப்புணர்வு அடைந்தவன் என்று பொருள், இந்த அர்தத்தில் படிங்க கவிதை வேறு திசையில் விரியும் micro diary
Title: Re: புத்தன் - 3
Post by: ஆதி on December 02, 2012, 08:08:12 PM
நிச்சலனமாய் இருக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
புத்தனாகிறது..
ச‌ல‌ன‌ம் கொள்ளும்
ஒவ்வொரு த‌ருண‌த்திலும்
நிர்வான‌மிழ‌க்கிறது..
அக‌ம்!

எத்த‌னை முறை புத்த‌னை ச‌ந்தித்தாலும்
அத்த‌னை முறையும் அவ‌னை அலட்சிய‌ம் செய்துவிட்டு
அவ‌னையே தேடி அலையும் புதிர்த்தான்
புரித‌லுக்கு சாத்திய‌ம‌ற்ற‌தாய் இருக்கிற‌து

மாட்டுத்தொழுவ‌த்தில் பிற‌ந்த‌வ‌னை போல‌
அழுக்கான‌ ம‌ன‌திலும் பிற‌க்கிறான் புத்த‌ன்
எனினும்
அவ‌னை சிலுவையில் அடிப்ப‌தில்தான்
குறியாக‌ இருக்கிற‌து அக‌ம்

சில‌ நேர‌ம் யூதாஸாய் இருந்து
என்னையே காட்டிக் கொடுக்கும் அக‌ம்
சில‌ நேர‌ம் முள்முடியாய் இருந்து
என்னையே துன்ப‌ப்ப‌டுத்துகிற‌து

எதையும் நிர‌ப்ப‌ முடியாம‌லும்
எதையும் காலி செய்ய‌ இய‌லாம‌லும்
இந்த‌ அக‌த்துட‌னான‌ என் போராட்டத்தில்
புத்த‌னை ர‌த்த‌ப்ப‌லிக்கு கையளித்துவிட்டு
மூன்றாம்நாள் உயிர்த்தெழுவானென‌
நம்பிக்கொண்டே இருக்கிறது
Title: Re: புத்தன் - 3
Post by: Thavi on December 03, 2012, 02:03:04 AM
kavithai vivathama super irruku ellam aadhi
Title: Re: புத்தன் - 3
Post by: Global Angel on December 04, 2012, 12:26:13 AM
Quote
மாட்டுத்தொழுவ‌த்தில் பிற‌ந்த‌வ‌னை போல‌
அழுக்கான‌ ம‌ன‌திலும் பிற‌க்கிறான் புத்த‌ன்
எனினும்
அவ‌னை சிலுவையில் அடிப்ப‌தில்தான்
குறியாக‌ இருக்கிற‌து அக‌ம்


உண்மைதான் ...  ஆசைகள் வரும்போது நம்முள் வாழத்துடிக்கும் புத்தன் சிலுவயில்தான் அரயபடுகின்ரான் .... நல்ல பொருள் பொதிந்த கவிதை ஆதி
Title: Re: புத்தன் - 4
Post by: ஆதி on April 05, 2013, 03:31:29 PM
புத்தனை தேடிக் கொண்டிருக்கிறேன் நான்

ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாய்
என்னை கவனித்து கொண்டிருகிறான் அவன்

அவன் அருகே செல்கிறேன்

அவன் கேட்கிறான் "என்ன தேடுகிறாய் ?"

"புத்தனை" என்கிறேன்

"எங்கே தொலைத்தாய் ?"

"இல்லை, தொலைக்கவில்லை!!!"

"எனின், தொலைக்காததை எதற்காக தேடுகிறாய்/எப்படி தேடமுடியும் ?"

"இல்லை, அவந்தான் காணாம*ல் போய்விட்டான்"

"அவனா ?"

"புரியவில்லையே?!!" என்கிறேன்

"அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
தென்பட்டான் புத்தன்