FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 05, 2012, 01:05:38 PM

Title: அடை
Post by: kanmani on November 05, 2012, 01:05:38 PM
 

    அரிசி - 1 1/4 கப்
    உளுந்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு‍ தலா கால் கப் வீதமாக எல்லாம் சேர்த்து - ஒரு க‌ப்
    துருவிய‌ தேங்காய் - 2 மேசைக்கரண்டி
    பெரிய‌ வெங்காய‌ம் -‍ ஒன்று
    முட்டைக்கோஸ் - ஒரு துண்டு (முழுக்காயை துண்டுகளாக வெட்டிய‌தில்)
    சிக‌ப்பு மிள‌காய் ‍- 3 (அ) சுவைக்கேற்ப‌
    பெருஞ்சீர‌க‌ம் -‍ ஒரு தேக்க‌ர‌ண்டி
    ம‌ஞ்ச‌ள்தூள் - ‍ அரை தேக்க‌ர‌ண்டி
    க‌றிவேப்பிலை - 2 கொத்து
    உப்பு, எண்ணெய் ‍- தேவையான‌ அள‌வு

 

 
   

அரிசி, ப‌ருப்பு வகைக‌ளை எல்லாம் ஒன்றாக‌ப்போட்டு, ந‌ன்கு க‌ழுவி எடுத்து, மூழ்கும‌ளவு த‌ண்ணீர் சேர்த்து குறைந்தது 3லிருந்து 4 ம‌ணி நேர‌ம் ஊற‌விட‌வும். வெங்காய‌ம், க‌றிவேப்பிலையை பொடியாக‌ ந‌றுக்கி வைத்துக்கொள்ள‌வும். முட்டைக்கோஸையும் பொடியாக‌ ந‌றுக்க‌வும், அல்ல‌து க்ரேட்டர் கொண்டு துருவியும் வைக்க‌லாம்.
   

ஊறிய‌ அரிசி, ப‌ருப்பு, மிள‌காய், பெருஞ்சீர‌க‌ம், தேங்காய்த் துருவல், உப்பு எல்லாவ‌ற்றையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு த‌ண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள‌வும்.
   

அரைத்து எடுத்த‌ மாவில், மஞ்சள்தூள், பொடியாக‌ ந‌றுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும்.
   

அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து க‌லந்துக்கொள்ள‌வும்.
   

அடுப்பில் த‌வாவை வைத்து கல் காய்ந்த‌‌தும் ஒரு க‌ர‌ண்டி மாவை எடுத்து ஊற்றி, க‌ர‌ண்டியால் தோசையாக‌ ப‌ர‌த்திவிட‌வும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடுப்பு தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.
   

ஒருபுற‌ம் வெந்ததும், அடையை திருப்பிபோட்டு, அடுத்த பக்கமும் வேகவிட்டு எடுக்க சுவையான அடை தயார். அடை சூடாக‌ இருக்கும்போதே த‌ட்டில் வைத்து, விருப்பப்ப‌ட்டால், மேலே கொஞ்சம் வெண்ணெய் த‌டவி ப‌ரிமாறலாம். மாஇஞ்சி (அ) த‌க்காளி தொக்கு என்று ஏதாவது கூட‌ வைத்தும் சாப்பிட‌லாம்.

 

ப‌ருப்புக‌ளுட‌ன், முட்டைக்கோஸும் சேர்வ‌தால் ந‌ல்ல‌ புரோட்டின், ஃபைப‌ர் ரிச் உண‌‌வாக‌ இருக்கும். காரத்தைபோலவே, வெங்காய‌ம், முட்டைக்கோஸ் எல்லாம் அவ‌ர‌வ‌ர் சுவைக்கேற்ப அளவை கூட்டி, குறைத்து போட்டுக்கொள்ள‌லாம்.