தீபாவளி!
எது தீபாவளி
இருப்பவனுக்கு சந்தோஷ
தீபாவளி இல்லாதவனுக்கு
பெரிய தலை வலி!...
பிள்ளைகளின் சந்தோஷம்
காண கடன் வாங்குவான் கணவன்
மனைவியின் நகை அடகுக்கு போனாலே
புது துணி வீடு வந்து சேரும் அதுவும்
கடைசி நேர தெரு துணிகடையில்!...
மனைவியோ எஜமானன் வீட்டு வேலை
முடித்து முன்பணம் வாங்கினால் தான்
நாளைய திருநாளுக்கு இன்று தான்
அரிசியே வாங்குவாள் கறி எடுத்து சமைத்து
இட்லி செய்தாலே பெருமகிழ்ச்சி!...
பிள்ளைக்கு நாலு கம்பி பட்டாசு
வாங்கவே நாலு ரூபா குறையும்
மாடி வீடு தெருக்களில்
வெடிக்க மறந்த பட்டாசை
பொறுக்கி ஆசை தீரும் பொடிசுகள்!...
விடிய விடிய தொடங்கி
பொழுது சாய்ந்தும்
பலரும் வந்து பேசும்
தொலைக்காட்சி
சிறப்பு நிகழ்ச்சிகள்!...
இந்த வருடம் மனம் முடித்த
பெண்ணுக்கு தலை தீபாவளி
மாப்பிளைக்கு மோதிரம்
போட கடன் வாங்கின சுமை
வெளிகாட்டாமல் சிரிக்க முயலும் தந்தை !...
மகள் தன்னுடன் கொண்டாடும்
கடைசி தீபாவளி என்று
அடுப்படி உள்ளே புகுந்து
பலகாரம் பல செய்து பார்த்து
பார்த்து பணிவிடை செய்யும் தாய்!...
பட்டாசு மொத்த விற்பனை
செய்யும் இடத்துக்கே சென்று
காசு கொடுத்து பட்டாசு என்ற
பெயரில் கரி வாங்கி வந்து
சாம்பலாக்கும் தம்பி !....
இது எல்லாம் தான் தீபாவளியா
இல்லாதவனுக்கு கொடுத்து
எவருக்கும் எந்த வலியும்
இல்லாமல் சந்தோஷமாக
கொண்டாடினால் அது தான் தீபாவளி !
துணி கடையில் இருந்த புத்தாடைகள்
நகை கடையில் இருந்து நகைகள்
பட்டாசு கடையில் இருந்து பட்டாசு
எல்லாம் வீடு வந்து சேர
விடிந்தால் தீபாவளி ...
வீதியெல்லாம் வண்ண வண்ண ஒளி
அதிகாலை எழுந்ததும் வாசலில்
அரிசிமாவு கோலமிட்டு எறும்புக்கு
உணவாய் கொடுத்து.....
வாசலில் அமர்ந்த படியே தெருவோரத்தில்
இளசுகள் நடத்தும் வான வேடிக்கைகளையும்
சிறுவர்கள் செய்யும் குறும்புகளையும்
கண்டு ரசித்த பார்த்தபடியே ....
பிஞ்சு குழந்தை கொஞ்சும் மழலை முகத்துடன்
பெரியவர்களின் சொல்லுக்கு இணங்க
தலைமுதல் பாதம்வரை மூலிகை எண்ணெய் தடவி
முத்து குளியல் போட்டு கடவுளை வணங்கி ...
வண்ணபட்டு உடுத்தி பவுர்ணமி
நிலவை போல அவள் அணிந்த
பாத கொலுசு இசை இல்லத்தில்
இசை மீட்க்கஅவள் அடி எடுத்து
வைத்தால் வரும் காதல் காவியம் ....
மங்கை அவள் கையில் சுமந்து வரும்
நெய் விளக்கு அவள் தானே எங்க வீட்டு
குத்து விளக்குஅவள் தானே எங்கள் வீட்டு
குல விளக்கு ......
பாற்கடலில் முத்து எடுத்து -அவள்
கையில் பலகார தட்டெடுத்து
சித்தனவாசல் சிற்பம் போல அசைந்து வரும்
சிங்காரத்தேர் போல என்னவள் ...
புது மாப்பிளை ஜரிகை வேட்டிகட்டி
மாமன் வீட்டுக்கு மைனர்போல் செல்ல
மச்சினிகள் கேலிபண்ண மனம் மகிழ்ச்சில்
உல்லாச தீபாவளி உலா வர நான் ...
தலை தீபாவளி கொண்டாடும் நங்கள்
வீட்டு பெரியவர்களின் முறைகள் படி
எல்லா சடங்கும் செய்ய என்னவளின்
முகம் ஒளி வட்டாமாய் மின்னியது ...
எதேட்சையாய் நான் வாசல் பக்கம்
செல்லும் போது முனையில் செல்லும் போது
பரவச சந்திப்பில் நம் கண்களுக்குள் சுழன்றன
சங்கு சக்கரங்கள் போல ...
அப்பொழுது சட்டென ஒரு சரவெடி வெடிக்க
அச்சத்தில் வீதி என்றும் பாராமல் கூட
ஓடி வந்துவிட்டாய் எனக்கு நெருக்கமாய்
பின் உணர்வறிந்து வெட்கத்தில் ஓடிவிட்டாய் ...
நேரம் ஆஹா நீ சமைத்து வைத்த சாப்பாடு
வாசம் என்னை சமையல் அறைக்கு அழைத்து
என் பசியை அறிந்த நீயோ உறவினர்களை அழைத்து
சாமிக்கு படைத்து அன்போடு பரிமாற...
சுவையான உணவை ஒரு பிடி பிடித்துகொண்டு
நான் பாராட்ட பதில்கு உறவினர்களும்
உன்னை பாராட்ட புகழ்ச்சி மழையால்
அன்று தினம் கழிந்த இன்ப தீபாவளி ...
எனக்கென ஒருத்தி இல்லாத போன வருட
தீபாவளியையும் எனக்கென நீ கிடைத்திருக்கும்
இந்த தீபாவளியையும் நினைவில் நீங்காத
இன்ப சந்தோசத்தில் நான் ...
பட்டாசும் மத்தாப்பும் வானவேடிக்கைகளுமாய்
மின்னிக் கொண்டிருக்கிறது இந்த ஊரைப் போல
என் வாழ்கைக்கும் என் குடும்பத்திற்கும் தீபம் ஏற்றி
இந்த தீபவளியை இன்பாமாய் மாற்றிய உனக்கு
எனது அன்பு கலந்த நன்றி !