FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 31, 2011, 09:58:03 PM
-
நீ ஒரு முறை சிந்தித்தால்
நான் பல முறை உன் அடிமை ஆவேன்...
ஈர நிலா வந்து என்னில் மோதியது
என் வாழ்வு வில்லாய் வளைந்தது...
சுற்றி முற்றி பார்த்தேன்
சொகுசாய் வாழ்ந்தேன்
வேரிலே வந்த செடி போல
எனக்குள் ஊன்றினாயடி...
என் கால் நகம் கூட
எனக்கு சொந்தம் இல்லை
என் கால் விரலாய் நீ
இருப்பாயானால்...
என் நிம்மதி தொலையவில்லை
அது உனக்குள் உள்ளதடி...
வெற்றிலை பாக்கில் சிவப்பதை விட
உன் பாசத்தில் சிவக்குமடி
என் கண்கள்...
என் மூச்சுக்குள் நீ இருப்பாய்
என நம்பினால்
எனையே உன் மூச்சாக்கினாய்...
-
என் கால் நகம் கூட
எனக்கு சொந்தம் இல்லை
என் கால் விரலாய் நீ
இருப்பாயானால்...
superb lins js ;)