FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: fcp.shan on October 30, 2012, 04:24:32 PM

Title: வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
Post by: fcp.shan on October 30, 2012, 04:24:32 PM
ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!! :P:P
Title: Re: வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
Post by: gab on November 01, 2012, 12:26:41 PM
நல்லதொரு நகைச்சுவை பொருந்திய கதை.
Title: Re: வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
Post by: Thavi on November 01, 2012, 07:43:21 PM
maappulai nalla oru karthu mattum comedy kathai superp thodarnthu elluthu maappulai vaalthugal
Title: Re: வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
Post by: பவித்ரா on November 03, 2012, 05:23:54 AM
antha vengayam nee thana bro iyo iyo kathai nalla iruku thodarnthu eluthu bro