FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 30, 2012, 10:58:55 AM

Title: ஒளி உமிழும் ஓர் அதிசய உயிரினம்!
Post by: kanmani on October 30, 2012, 10:58:55 AM
இயற்கையின் அதிசயங்கள் தான் எத்தனை எத்தனை? விந்தைமிக்க உயிரினங்களின் இயல்புகளை அறியும்போது நமக்கே சில வேளைகளையும் ஆச்சர்யத்தையும் அற்புத உணர்வையும் விளைவிக்கிறது அல்லவா? அந்த வகையில் இயற்கையில் ஒளி உமிழும் உடலமைப்பைப் பெற்ற இந்த மின்மினி பூச்சியும் சேருகிறது. பூச்சி வகைகளில் இது முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது. இரவில் ஒளியை உமிழும்(ஒளிரும்) மின்மினிப் பூச்சிக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்.? அது எப்படி ஒளிர்கிறது? நம் வீட்டில் ஒளிரும் மின்விளக்குகள் மின்சாரம் கொண்டுதானே ஒளிர்கிறது!. அப்படியானால் மின்மினிக்கும் மின்சாரம் தேவையா? தானே அந்த மின்சாரத்தை தயாரிக்கிறதா? எப்படி இப்படியொரு ஒளி உமிழும் அதியம் ஏற்படுகிறது? இத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த பதிவு. இறுதியில் மின்மினிப் பற்றிய காணொளிகளும் இடம்பெற்றுள்ளது. இனி பதிவைப் பார்ப்போம்.

மின்மினிப்பூச்சிகளைப் பற்றிய சில உண்மைகள்

    அதாவது மின்மினிப்பூச்சிகள் ஒரு சிக்கலான உயிர்வேதியியல் -Bio Chemical முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
    இதில் ஒளிரக்கூடிய பொருள் லூசிபெரின்(luciferin) என்ற ஒரு கூட்டுப்பொருள்.
    லூசிபெரின்(luciferin) பூச்சியிலுள்ள ஒளி உமிழ் உறுப்பில் (Light emitting organ) நிறைந்திருக்கிறது.
    இந்த லூசிபெரின் ஆனது லூசிபெரஸ் என்ற என்சைமில் (enzyme) உள்ள ஆக்சிஜன், உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP எனும் வேதியியல் பொருள் , மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.
    இதில் ஏதேனும் ஒரு பொருள் இல்லாவிடினும் ஒளி ஏற்படாதாம்.
    மின்மினிப்பூச்சி விட்டு விட்டு ஒளிர்வதற்கு காரணமே, அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (Nerve impulses) விட்டு விட்டு தொடர்பற்று செல்வதால்தானாம்.
    இந்த ஒளி உமிழ்வின்போது வெப்பம் எதுவும் வெளியிடப்படுவதில்லை.
    இயற்கையாகவே இந்நிகழ்வு பூச்சியினுள்ளே ஏற்படுகிறது.

minmini poochi

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-e-O_ir_RbNs%2FTv5a_-V7BUI%2FAAAAAAAAC74%2Fh4NvA4WfuIM%2Fs320%2Fminmini_poochi_1.jpg&hash=e8b37676ebdba5c4ff8d1825aa999c97c84f33b8)
மின்மினி பூச்சிகளைப் பற்றிய ஒரு சிறிய அலசல்:

மண்ணில் முட்டை வைக்கக்கூடிய தன்மையுடையது பெண் மின்மினிப் பூச்சிகள். 4 வாரங்களில் முட்டையிலிருந்து இளம் புழு வெளியேறிவிடும். வெயில் காலத்திலும், வேனிற்காலத்திலும் உணவினை நன்கு எடுத்துக்கொண்டு வளர்ந்து வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் ஒளிந்திருக்கும்.

உணவு:

இவை தனக்குப் பிடித்தமான நத்தை மற்றும் மண்புழுவை உண்ணும். இது இரையை எடுத்துக்கொள்ளும் விதமே வித்தியாசமாக இருக்கும். முதலில் இரையை மயக்கமடையச் செய்துவிட்டு, தன் முகப்பகுதியில் இருக்கும் கத்திப்போன்ற கொடுக்கை பயன்படுத்துகிறது. கொடுக்கின் மூலம் எதிரியை மயக்கமடைச் செய்யக்கூடிய வேதிப்பொருளை, எதியின் உடலில் செலுத்துவதில் ஒரு தேர்ந்த மருத்துவரின் அணுகுமுறையை கையாள்கிறது.

அதன் பிறகு செரிமான நொதிகள் இரையினுள் செலுத்துகிறது. இதனால் இரையானது ஒரு சில மணி நேரத்தில் கூழ்மமாக மாறிவிடுவதால், அவற்றைச்சுற்றி மின்மினிப் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து கொண்டு தங்களுக்குத் தேவையான உணவை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில் தனது உடலில் அடிவயிற்றுப்பகுயின் முடிவில் விளக்குப் போன்ற வெளிச்சம் உருவாகிறது.

இதன் வெளிச்சத்தன்மையால் ஒரு சில பறவைகள் தனது கூடுகளில் வெளிச்சத்திற்காக பிடித்து வைத்துக்கொள்வதாகவும் தகவல் உண்டு.