FTC Forum
Videos => General Videos => Topic started by: kanmani on October 29, 2012, 11:14:52 PM
-
Short film review - punnagai vanginal kanneer Ilavasam
ஒரு வயதான தாய். தனது கணவர் இறந்துவிடுகிறார். அதனால் அவரது பெரிய மகன் வீட்டில் தஞ்சம் அடைகிறார். சில நாட்களில் வயதான தாய் கர்ப்பம் தரித்திருக்கிறார் என தெரியவருகிறது. விஷயம் தெரிந்த அவரின் மகனும், மருமகளும் என்ன செய்கிறார்கள். வயதான தாயை பராமரித்தார்களா? வயதான தாய் குழந்தையைப் பெற்றெடுத்தாளா? இறுதியில் என்னதான் நடந்தது? என்பதை இக்குறும்படத்தில் சித்தரித்திருக்கிறார்கள்..
வணக்கம் எனது இனிய நண்பர் பெருமக்களே..!
நான் ரசித்த இக்குறும்படத்தைப் பற்றி எண்ணவோட்டங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
punnagai vanginal kanneer ilavasam
சாதாரணமாக வயதான பெற்றோர்களை (Old parents) பாரமாக நினைக்கும் சந்ததியினர்தான் தற்போது நிறையபேர் உள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக சொல்லப்போனால், வயதான காலத்தில் அவர்களிடமிருந்து எந்த ஒரு வருமானமோ (income-money) அல்லது பயனோ இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.
மற்றொரு முக்கிய காரணமாக சொல்வதானால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களால் செய்யமுடியாத செயல்களை நாம் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் போய் செய்துதர வேண்டும் என்பதே. உதாரணமாக குளியலறைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுவது, கழிவறைக்கு கொண்டுசெல்வது இப்படி. படுக்கையோடு இருப்பவர்கள் எனில் மல, ஜலங்களை அப்புறப்படுத்துவது, அவர்களை தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்திருப்பது இப்படி.
பெற்ற பிள்ளைகளே இத்தகைய சேவைகளை செய்ய மனம் வராமலிருப்பதும் உண்டு. அவ்வாறிருக்க வீட்டிற்கு வந்த மருமகள்கள் செய்ய வேண்டிய அவசியமென்ன? என எதிர்கேள்வி கேட்கும் மருமகள்களும், மருமகன்களும் இருக்கத்தானே செய்கின்றனர்?
இவ்வாறான தற்காலச் சூழ்நிலையில் ஒரு வயதான தாய், தனது கணவர் இறந்தவுடன் மகன் வீட்டிற்கு செல்கிறார்...
அங்கு தான் ஒரு விடயம் தெரியவருகிறது. அவரது தாய் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது மருத்துவர் மூலம் தெரியவருகிறது. சாதாரணமாக வயதானவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பதே பெரிய விடயமாக நினைக்கும் இக்கால பிள்ளைகளுக்கு, வாயதான காலத்தில் கர்ப்பிணியாக இருப்பது மேலும் பிரச்னை உண்டு செய்யுமே என எண்ணுகிறார் நமது குறும்படத்தின் கதாநாய..
இந்த சூழ்நிலையில் அவருடைய மகளும், பேத்தியும் அவர்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.. இங்குதான் பிரச்னையே விசுவரூபம் எடுக்கிறது. தனது மருமகன் ஓரிரு நாட்களில் அங்கு வந்துவிடுவார் என தனது மகள் மூலம் அறிந்த வயதான தாயின் மகனும், மருமகளும், திகைக்கின்றனர்.
தனது தாய் கர்ப்பிணியாக இருக்கிறார் என தனது மருமகனுக்குத் தெரிந்தால் மேலும் அவமானம் என கருதிய, மகனும், மருமகளும் வயதான தாயை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்...(That his mother is pregnant and is known for his nephew, who felt as ashamed, son, daughter-in-year-old mother wants to discard .)
அதற்கு அவர்கள் செய்யும் முயற்சியும், அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் இந்த குறும்படத்தில் சித்தரித்திருக்கிறார்கள்.
நல்ல ஒரு பேச்சாளராக, குடும்ப பந்தங்களைப் பற்றி அழகாக விளக்கும் கூறும் சிறந்த மேடைப் பேச்சாளராக பரிமளிக்கும் இக்குறும்படத்தின் கதாநாயகனின் நடிப்பு அருமை. இதற்குமேல் விரிவாக சொன்னால் படத்தின் சுவராஷ்யம் குறைந்துவிடும்.
மனதை நெகிழச் செய்யும் இக்குறும்படத்தை நீங்களும் பாருங்களே.
http://www.youtube.com/v/-6CnoKiD9NE&feature=player_embedded
இந்த குறும்படத்திற்கு கண்ணீர் வாங்கினால் புன்னகை இலவசம் என்பதை விட போலி கவுரவம் வாங்கினால் புன்னகை இலவசம் என வைத்திருக்கலாம். பெற்ற தாயை எங்காவது கண்காணாத இடத்தில் விட்டுச் செல்ல துணியச் செய்தது என்ன? இவரது போலியான கவுரவம் தானே?
எப்படியிருந்தும் ஒரு சில நாட்களில் இந்த விடயம் வெளியில் தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம். எதையும் சமுதாயத்தில் மூடி மறைக்க முடியாது. அவ்வாறிருக்க, ஒரு படித்த மேடைப்பேச்சாளரான ஒருவருக்கு இது ஏன் புரியாமல் போனது என்பதுதான் என்னுடைய கேள்வி.
இறுதியாக ஒரு குழந்தை அவருடைய மேடைப்பேச்சுக்கு கொடுத்த பரிசைப் பார்த்ததும், அவர்மட்டுமல்ல.. பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை..தடுக்கவும் முடியவில்லை.
(பாசத்திற்கு கட்டுப்பட்டு, இது நம் தாய், இது நம் தந்தை... இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை, பராமரிப்பது நம்முடைய அன்றாடச் செயல்களில் அதுவும் ஒன்று நினைத்து பெற்றோர்களை முகம் சுளிக்காமல் பராமரிக்கும் ஒரு சிலரும் இருக்கவே செய்கிறார்கள். இந்த ஒரு சிலரைப் போல பலரும் மாற வேண்டும். வயதான பெற்றோர்களை அரவணைத்து அவர்களின் கடைசிக் காலத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றி நாமும் மகிழவேண்டும். )
-
நாளைய இயக்குநர் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறும்படம் இது. கதைக்கருவை படமாக்க தைரியம் வேண்டும். இதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
எனக்குப் பிடித்த குறும்படங்களில் இதுவும் ஒன்று.
-
Title-ey superrrrrrrrrrrrr
very niceeeeeee