FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: kanmani on October 29, 2012, 06:45:28 PM

Title: குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை எப்படி பாத்துக்கணும் தெரியுமா?
Post by: kanmani on October 29, 2012, 06:45:28 PM
குழந்தை பாக்கியம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிலும் அவ்வாறு குழந்தை பிறந்த பின்னர், அந்த குழந்தையை கைகளில் தூக்கிக் கொண்டு, வீட்டிற்கு வருவது என்பது மறக்க முடியாத ஒரு பெரும் அனுபவம். அவ்வாறு சாதாரணமாக பிறந்த குழந்தையையே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் போது, குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் அதை விட இரண்டு மடங்கு மிகவும் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அதற்காக ஒரு நர்ஸை அழைந்து வந்து பார்த்துக் கொள்வதை விட, தாயானவள் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டால் தான், குழந்தை இன்னும் நன்றாக ஆரோக்கியத்துடன் வளரும். இப்போது அவ்வாறு குறை மாதத்தில் குழந்தை பிறந்திருந்தால், அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தை நல மருத்துவர் கூறுவதை படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்.

how care a premature baby
* பொதுவாக பிறத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அப்போது தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தையால் பாலை குடிக்கும் அளவில் திறமை இருக்காது. ஆகவே குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு, மருத்துவரை அணுகியப் பின்னரே பாலை கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் குழந்தையின் எந்த உறுப்புகளும் சரியாக இயங்க முடியாது. எனவே தான் மருத்துவரை அணுகி, எப்போது கொடுக்கலாம் என்று தெரிந்து கொண்டு கொடுக்க வேண்டும்.

* குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது ஒரு சிறந்த வழி. ஏனெனில் இதனால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, சருமத்தின் நிலை மற்றும் செரிமான மண்டலம் நன்கு நடைபெறும். மேலும் மசா4 செய்தால், குழந்தையின் உடல் நன்கு வலுவோடு, ஆரோக்கியத்துடன் இருக்கும்.

* குறைமாத குழந்தைக்கு படுக்கும் நிலை என்பது மிகவும் முக்கியமானது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தில், இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சில சமயங்களில் குழந்தையின் படுக்கும் நிலை சரியாக இல்லாத காரணத்தினாலும், குழந்தை இறக்க நேரிடும். ஆகவே குழந்தையை சரியாக படுக்க வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

* இந்த மாதிரியான குழந்தையின் உடலில் சரியான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே இந்த குழந்தையை எளிதில் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே சரியான சுத்தமான பராமரிப்பு அவசியம்.

* குழந்தை குறைமாதத்தில் பிறந்தால், தொடர்ச்சியாக மருத்துவரிடம் சென்று சோதிக்க வேண்டும். இதனால் குழந்தையை ஏதாவது நோய் தாக்கியிருந்தாலும், அதை உடனே வளர விடாமல் தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, குறை பிரவசத்தில் குழந்தை பிறந்தால், மிகவும் கவனமாக பராமரிக்கவும். இதனால் குழந்தை விரைவில் நன்கு வலுவோடு வளர்ந்து, ஆரோக்கியத்துடன் இருக்கும்.