FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 29, 2012, 06:15:54 PM

Title: மருந்தாகும் கருஞ்சிவப்புத் தக்காளி
Post by: kanmani on October 29, 2012, 06:15:54 PM
சாதாரணமாக இப்போது நமக்கு தக்காளிப் பழம் கிடைக்கிற காலம் இது..!  ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்று சிறப்பாக அழைக்கப்படும் தக்காளிப்பழம் ஒரு உயிர்காக்கும் மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? சமீப கால விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி இது..


தாவரங்கள், அவற்றில் உள்ள இரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, ஃபுளோரா (Flora) என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.  ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ் ஐரோப்பிய மையங்கள் மற்றும் இங்கிலாந்து, நார்வேயில் உள்ள ஜான் இன்னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்புத் தக்காளியை உருவாக்கி உள்ளனர்.

தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்புத் தக்காளி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த கருஞ்சிவப்புத்தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ்நாளை அதிகரிக்கும் மருத்துவக் குணம் கொண்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

'பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும்.  இந்தக் குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்புத் தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.