FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 29, 2012, 05:07:31 PM

Title: உலகின் முதல் செயற்கை உயிரி..!
Post by: kanmani on October 29, 2012, 05:07:31 PM
முதல் 'செயற்கை உயிரி'

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணு அமைப்பில் மாற்றம் செய்வதன் மூலம் பல்வேறு மருத்துவ சாதனைகளை விஞ்ஞானிகள் நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்கு அடுத்த கட்டமாக செயற்கையாக அவற்றை உருவாக்க முடியுமா? என்றும் மரபணு குறித்து ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞாஇகள் பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். அதாவது, முதலில் ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்தனர். பின்னர் அதில் செயற்கையா இராசாயனங்களைக் கலந்து உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இந்த செயற்கை உயிரியின் பெயர் 'சிந்தியா'

அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னிய மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச்சேர்த்த விஞ்ஞானிகள் இந்த ஒற்றை செல் செயற்கை உரியிரை உருவாக்கியுள்ளனர்.

முதலில் மைகோபிளாஸ்மா மைகாயிட்ஸ் எனப்படும் பாக்டீரியாவின் மரபணுவை மாற்றம் செய்த்தன் மூலம் 'மைகோபிளாஸ்மா காப்ரிகாலம்ய என்ற பாக்டீரியாவை உருவாக்கினார்கள். இதன் டி.என்.ஏ. அமைப்பை போன்ற மாதிரி வடிவத்தை கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் வடிவமைத்தனர். இந்த செயற்கை டி.என்.ஏ.வில் சில இராசாயனங்களைக் கலந்து ஒற்றை செல் உயிரியை உருவாக்கினார்கள்.

'இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினிதான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயமாக இதுதான் என்கிறார் இந்தச்செயற்கை உயிரியைப் படைத்திருக்கும் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.

இந்த ஆய்வின் மூலம், செயற்கை பாக்டீரியாக்களை உருவாக்கி மருந்துகள் தயாரிக்க முடியும்.

அதே நேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு செயற்கையாக உயிரிகளைப் படைப்பது தார்மீக அடிப்படையில் சரியா, தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பயோ என்ஜனியரிங் என்று சொல்லப்படும் இந்த உயிரியல் தொழில்நுட்பத்தால் ஒரு புதிய தொழில்துறைக்கான கதவுகள் திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

24 பேர் கொண்ட இந்த விஞ்ஞானிகள் குழுவில் மூன்று பேர் இந்திய வம்சாவழியினர். சஞ்சய் வாஷ, ராதாகிருஷ்ண் குமார் மற்றும் பிரசாந்த் பி. பார்மா