FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 28, 2011, 11:07:22 PM
-
இவனை இன்னவென்று
கூப்பிடுவது
நான் தவறும் போதெல்லாம்
மனசாட்சியாக தட்டிக் கேட்பவன்
நான் அழும் போதெல்லாம்
கண்ணீரை தாங்கிப் பிடிப்பவன்
நான் துவண்ட போதெல்லாம்
தோள் கொடுத்து தூக்கியவன்
எனக்கு ஜலதோசம் வந்தால்
எனக்காக தும்முபவன்
எனக்கு காலில் அடிபட்டால்
வருத்தத்தில் கண்ணீர் வடிப்பவன்
ஒரு தட்டில் என்னுடன்
ஒன்றாக சாப்பிடுபவன்
இவனை நண்பன் என்று கூப்பிடாமல்
நல்ல பெயர் வேறு இருந்தால்
சொல்லுங்களேன்
-
Nanbane thaan ;) ;)
-
thamilanin thamilan nru kupidalam:D:D