FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: kanmani on October 28, 2012, 11:17:40 PM
-
வணக்கம் நண்பர்களே...! இந்திய ரூபாய் குறீயீட்டை குறிக்கும் வகையில் இந்திய அரசு இந்திய ரூபாயைக் குறிக்கும் குறியீட்டை வெளியிட்டது. கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட இந்தக் குறியீட்டை கணினியில் எப்படி தட்டச்சு செய்வது என நிறையபேர் குழம்பி போயினர்.. பிறகு பலரும் பல வகைகளில் இதற்கு தீர்வு கண்டனர்.. அவற்றில் நாம் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள முறை பயன்படுத்த மிகச் சுலபமாக இருக்கிறது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-aTz4mD1Y5nw%2FT83xCyV6U4I%2FAAAAAAAAFNI%2FOIIWkK3s6EY%2Fs320%2Fsymbol-of-indian-rupee.jpg&hash=d078cfb4abad26536c229e0e4f754f6e934fa355)
இந்திய ரூபாயின் குறியீட்டை கொண்டுவருவதற்கு முன்பு அவற்றை உருவாக்கியவரைப் பற்றியும் அதன் அர்த்தத்தையும் பற்றியும் தெரிந்துகொள்வோம்..
இந்திய ரூபாய்க் குறியீட்டை உருவாக்கியவர்:
இந்திய ரூபாயின் குறியீட்டை உருவாக்கியவர் சென்னையைச் சேர்ந்த உதய குமார் என்பவர். இவர் பழங்கால தமிழ் எழுத்துமுறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இந்த ஆய்வுகளே தனது இந்திய ரூபாய் குறியீட்டின் வடிவமைப்புக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசு மார்ச் -5 , 2009 ம் வருடம் இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்குவதற்கான போட்டியை அறிவித்தது. இறுதியில் ஐந்து பேர் வடிவமைத்தக் குறீயீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமாரின் வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர் தற்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்திய ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்து கொடுத்ததன் மூலம் இவர் உலகளவில் புகழ்பெற்றுள்ளார். . அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்தான் இந்த உதயகுமார்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Gi7rRGzS5Ts%2FT83myjXDfCI%2FAAAAAAAAFMM%2Fsh6wwUIZzDk%2Fs320%2Fudayakumar_indian-rupee-symbol-creator.jpg&hash=8017af9d16556b679a998a4a6e660ec0a8e32497)
இந்திய ரூபாய்க் குறியீட்டைக் கணனியில் கொண்டுவர...
இந்த குறியீட்டை உங்கள் கணினியில் கொண்டு வர கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கி font டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
http://www.mediafire.com/?3pohrs3hsw9mb7c
பிறகு control panel சென்று அங்கு Fonts என்ற போல்டரைத் திறக்கவும்.
டவுன்லோட் செய்து எழுத்துருவை அதில் காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.
இப்போது Font போல்டரை மூடிவிட்டு உங்கள் கணினியை Restart செய்துவிடவும்.
இப்போது Note Pad ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
அதில் Format மெனுவை கிளிக் செய்து font என்பதை சொடுக்குங்கள். தோன்றும் விண்டோவில் Rupee என்ற பாண்ட்டை தேர்ந்தெடுக்கவும். இப்போது கீர்போர்டில் எண் 1 க்கு முன்னதாக உள்ள கீயை அழுத்துங்கள். இந்திய ரூபாய்க்கான symbol வந்திருக்கும். தேவைப்படும்போது இதுபோல செய்து இந்திய ரூபாய்க் குறீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
Ms-word, wordpad மற்றும் MS-Excel போன்ற அனைத்து Word processor application களிலும் இது தொழிற்படும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-m5FzPrKB5Ss%2FT83wGWcePUI%2FAAAAAAAAFNA%2FOL7IiCRVqGc%2Fs320%2Fselect-font-option-in-note-pad.jpg&hash=57e8877bee84bbed1d045fcc468067f48ec2290e)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-gSjjdeUy1WY%2FT83vy5pW8tI%2FAAAAAAAAFMw%2FW5hQhopVgkw%2Fs320%2Fselect-font-rupee.jpg&hash=5ecd3ee8587a38f7633265521192a165380bfef1)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-ebWzKc2ribg%2FT83vyLGf6eI%2FAAAAAAAAFMo%2Fa6zALuC_tBk%2Fs320%2Fpress-this-key-for-indian-rupee-symbol.jpg&hash=659d990c757d8eeee1f29bddb5e2040d0547f353)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-JjMzclyMvsM%2FT83yEWga_EI%2FAAAAAAAAFNQ%2FVYwX_uVqvQg%2Fs320%2Ftyped-indian-rupee-symbol-in-notepad.jpg&hash=1d2db54c92dad6df7bf3d37c8134aeb1f30c7549)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-SkNWfs-8G7M%2FT83vzoMU4gI%2FAAAAAAAAFM4%2FSWxODFNV_Yw%2Fs320%2Fudayakumar_indian-rupee-symbol-creator1.jpg&hash=d1c3941314d3448203da3ba13a29d28c5da538fc)
இந்த இணைப்பில் சென்று இந்திய ரூபாய் குறீயீட்டிற்கான எழுத்துருவை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
http://www.mediafire.com/?3pohrs3hsw9mb7c
குறிப்பு: இந்த எழுத்துருவானது யுனிக்கோட் எழுத்துரு அல்ல. மேலும் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தி தட்டச்சிட்ட கோப்புகள் அனைத்தும் , மற்ற கணினியில் திறந்து பார்க்கும்போது ரூபாய்க்குறியீட்டைக் காண முடியாது. மற்ற கணினிகளிலும் இந்த எழுத்துருவை நிறுவிய பின்னரே குறீயீடு தோன்றும்.
நன்றி.!
-
அக்கா நல்லா பதிவு,...
இதை நான் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் ;)