FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on October 28, 2012, 11:05:52 PM

Title: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் வழிமுறைகள் (பெண்களுக்கான அழகுக் குறிப்ப
Post by: kanmani on October 28, 2012, 11:05:52 PM
பெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி?
remove the fur on the face
முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க

ஐந்து வழிமுறைகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் லேசர் போன்ற அதி நவீன சிகிச்சை வந்துவிட்டிருந்தபோதிலும், இயற்கை மருத்துவமுறைக்கு ஈடாகாது.

நவீன சிகிச்சை முறைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த முறையில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. மேலும் முகப் பொலிவு, முக அழகு கூடும்.
முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளே பிராதான மருந்துப்பொருளாக பயன்படுகிறது.

ஒரு சில பெண்களுக்கு முகத்தில் மட்டுமல்லாது கை,கால்கள் என முடிகள் இருக்கும். இவற்றை நீக்குவதற்கு கீழ்க்கண்ட முறைகள் மிகவும் பயனளிக்கும்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது மூலிகை கடைகளில் அவர்களே அரைத்து விற்பனை செய்கிறார்கள். இந்த கஸ்தூரி மஞ்சளோடு பாலாடையை சேர்த்து பூசி வர முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் படுக்கப் போகும்முன் முகத்தில் பூசிக்கொண்டு படுக்கவும். காலையில் எழுந்து இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவினால் படிப்படியாக முகத்தில் உள்ள முடிகள் மறைந்துவிடும்.

மற்றுமொரு முறை மஞ்சளுடன் பப்பாளிப் காயையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் விழுந்து முகம் பொலிவு பெறும்.

பசும்பாலுடன் பாசிப்பயறு தோலைக் கலந்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் அனைத்தும் போயே போச்சு.... இனி உங்கள் முகம் முடிகள் இல்லாமல் பளபளக்கும்.. தொடர்ந்து இந்த முறைகளை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது கடைகளில் கிடைக்கும் hair remover, losans, மற்றும் நவீன லேசர் சிகிச்சைப் போன்றவைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் கவனத்தில்கொண்டு இந்த இயற்கையான முறைகளைப் பின்பற்றி முகத்தை அழகூட்டுங்கள்..