FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 07:00:02 PM
-
ராவியோ மொபைல் நிறுவனம் தயாரித்து வழங்கிய ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற வீடியோ விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ஏனெனில் உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இந்த விளையாட்டை ரசித்து விளையாடி வருகின்றனர்.
இந்த விளையாட்டு பிரபலமானதைத் தொடர்ந்து, அடுத்த கட்டத்திறக்கு ராவியோ எடுத்துச் செல்ல இருக்கிறது. அதாவது ராவியோ புதிதாக ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ் என்ற பெயரில் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ் பறவைகளுக்கும் பச்சைப் பன்றிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையைக் கொண்டு வருகிறது. அதாவது பச்சைப் பன்றிகள் மார்சில் உள்ள கியூரியாசிட்டி மார்ஸ் ரோவரைக் கடத்திச் சென்று அதை வைத்து முட்டைகளைத் தேடுவதற்காகப் பயன்படுத்தும்.
அதனால் கோபம் கொண்ட பறவைகள் இந்த பன்றிகளை எதிர்த்து ரோவரை கைப்பற்றுவதற்காகப் போராடும். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நம்பலாம்.
ஆங்கிரி பேர்ட்ஸின் புதிய வெர்ஷன் ஆங்கிரி பேர்ட்ஸின் அத்தனை அம்சங்களையும் கொண்டு வருகிறது. மேலும் இதில் 20 புதிய லெவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த புதிய விளையாட்டை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களிலும் விளையாடலாம்.