FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on October 28, 2012, 10:40:01 AM

Title: பப்பாளி பஷன் புருட்டி
Post by: ஸ்ருதி on October 28, 2012, 10:40:01 AM
பப்பாளி பஷன் புருட்டி



சாப்பாடு முடிந்து விட்டதா? வாய்க்கு ருசியாக உடலுக்கு ஆரோக்கியமாக ஒரு டெஸேட் இது.

சின்னுகள் பழங்கள் என்றாலே காததூரம் ஓடுவார்கள். பின் பைல்ஸ் என முனங்குவார்கள். அவர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியது இதன் 'கவர்ச்சி'. சுவையும்தான்

இந்தச் செய்முறை இரண்டு பேருக்கு அளவானது

தேவையானவை

சிறிய சைசான பப்பாசிப் பழம்- 1

ஒரு அங்குல உயரமுள்ள 4 வட்டமான துண்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். (தோல் சீவி, விதைகளை நீக்கி விடவும்).

பஸன் பழம்- 1
சீனி- 3 தேக்கரண்டி
செய்முறை

பஸன் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் சாறை சிறு கரண்டியால் எடுத்து, கோப்பை ஒன்றில் வைக்கவும். இதனுடன் சீனி சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கவும்.

பரிமாறும் கோப்பையில் பப்பாளித் துண்டு 2யை வைத்து மேலே பஸன் கலவையில் பாதியை பரப்பிவிடவும்.

இவ்வாறு இன்னொரு கோப்பைத் தயார்படுத்தவும். ஒரு மணி நேரம் பிரிஜ்ல் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

புளிப்புடன் இனிப்பும் சேர்ந்த கதம்ப சுவை அலாதியானது. பஸன் விதைகள் மொறு மொறுவென கடிபடுவது வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.